Asianet News TamilAsianet News Tamil

அயோத்தி ராமர் கோயிலை சுத்தம் செய்யும் Iron Man, Bat Man.. உணவு சமைக்கும் Thanos.. வைரல் AI போட்டோஸ்..

மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கற்பனையை AI மூலம் புகைப்படங்களாக உருவாக்கி உள்ளார்.

From Iron man, Bat man to Wonder woman Super heros visit Ram mandir in Ayodhya viral AI Pics Rya
Author
First Published Jan 20, 2024, 11:20 AM IST

அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக இந்த விழா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையில் இந்த விழா நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே Sahixd டிஜிட்டல் கிரியேட்டர் தனது படைப்பாற்றல் மூலம் அயோத்தி கொண்டாட்டத்திற்கு, ஒரு சூப்பர்ஹீரோயிக் அம்சத்தை சேர்த்துள்ளார்.. அவர் மார்வெல் மற்றும் DC காமிக்ஸ் சூப்பர் ஹீரோக்கள் ராம் மந்திர் கும்பாபிஷேக விழாவிற்கு வருகை தந்தால் எப்படி இருக்கும் என்ற தனது கற்பனையை AI மூலம் புகைப்படங்களாக உருவாக்கி உள்ளார். இந்த படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.

மார்வெல் மற்றும் டிசி காமிக்ஸில் இருந்து பல சூப்பர் ஹீரோக்கள் ராமர் கோயிலில் தங்கள் சேவைகளை வழங்குவதையும், அயோத்தியில் உள்ள உள்ளூர் மக்களுடன் தொடர்புகொள்வதையும் அந்த புகைப்படங்களில் பார்க்க முடிகிறது.

அயன் மேன், சூப்பர்மேன், பேட்மேன், வொண்டர் வுமன், ஸ்பைடர் மேன், தோர், ஹல்க் மற்றும் டெட்பூல், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தானோஸ், தி ஜோக்கர் மற்றும் லோகி போன்ற சில பிரபலமான காமிக் புத்தக வில்லன்களையும் அயோத்திக்கு சென்றுள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sahid SK (@sahixd)

 

மேலும் ஸ்டார் வார்ஸ் படத்தின் கதாப்பாத்திரங்களையும், பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் உரிமையாளரின் கேப்டன் ஜாக் ஸ்பாரோவாக நடித்த ஜானி டெப்பின் கதாபாத்திரத்தையும் சேர்த்துள்ளார். மேலும் ஹாரி பாட்டர், ஹெர்மாயின் உள்ளிட்ட கேரக்டர்களும் அயோத்தியில் செல்ஃபி எடுப்பது போன்ற புகைப்படங்கள் உள்ளன.

அயர்ன் மேன் மற்றும் பேட்மேன் இருவரும் ராமர் கோயிலுக்கு சேவை செய்வதை பார்க்க முடிகிறது. சூப்பர் ஹீரோ ஆடைகளுக்கு மேலே, காவி உடை அணிந்து கோவில் தளங்களை சுத்தம் செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.

அடுத்த படத்தில் ஸ்பைடர்மேன் மற்றும் ஹல்க் இருவரும் ஒரு துறவிக்கு உணவு வழங்குகின்றனர்.. டெட்பூலும் ஜோக்கரும் கோவில் வளாகத்தை சுத்தம் செய்கின்றனர். சூப்பர்மேன் பூக்கள் நிரம்பிய ஒரு கூடையைத் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார். ஸ்டார் வார்ஸின் இரண்டு கதாபாத்திரங்கள் அடுத்த படத்தில் நெருப்பின் முன் அமர்ந்திருக்கின்றன..

அதே போல் ஜாக் ஸ்பேரோ மற்றும் ஒண்டர் உமன் இருவரும் விளக்குகளை ஏற்றுகின்றனர். இவர்கள் இருவருமே காவி உடை அணிந்துள்ளனர். அடுத்த படத்தில் தோர், லோகி இருவரும் இசைக்கருவிகளை வாசிக்கின்றனர்.

மார்வெல் சூப்பர் வில்லன் தானோஸ் க்ரூட் உடன் இணைந்து உணவு சமைக்கிறார். கேம் ஆஃப் த்ரோன்ஸின் ஜான் ஸ்னோவுடன் இணைந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்  மக்களுக்கு உணவு வழங்குகிறார்.

ஹாரி பாட்டர் நட்சத்திரங்கள் - ஹாரி (டேனியல் ராட்க்ளிஃப்), ஹெர்மியோன் (எம்மா வாட்சன்), மற்றும் ரான் வெஸ்லி (ரூபர்ட் கிரின்ட்) ஆகியோர் கோயில் பின்னணியில் செல்ஃபி எடுக்கின்றனர். இந்த போட்டோக்களுக்கு நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டா மட்டுமின்றி பிற சமூக வலைதள பக்கங்களிலும் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

AI தொழில்நுடப்த்தின் படைப்பாற்றலை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்கள் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி வருகிறனர். அந்த வகையில் இன்ஸ்டா பயனர் ஒருவர் "இது ஏன் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று கருத்து தெரிவித்துள்ளார். இதே போல் மற்றொரு பயனர் "இவ்வளவு நாளாக நான் பார்த்த சிறந்த பதிவு இது.... மிக்க நன்றி" என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios