ஐதராபாத்தில் பிரதமர் மோடி.! திருப்பதி டூ செகந்திராபாத் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை துவக்கி வைப்பு!!
பிரதமர் மோடி இன்று காலை ஐதரபாத் வந்த நிலையில் செகந்திரபாத் முதல் திருப்பதி வரையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
ஐதராபத்தில் மோடி
பிரதமர் மோடி தெலுங்கானா,தமிழ்நாடு, கர்நாடக ஆகிய மாநிலங்களுக்கு இன்று மற்றும் நாளை ஆகிய இண்டு நாட்கள் சுற்றுபயணம் மேற்கொள்கிறார். அப்போது பல்வேறு பல்வேறு திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்டங்களை தொடங்கிவைக்கவும் உள்ளார். இந்தநிலையில் இன்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலம் ஐதரபாத் வந்த பிரதமர் மோடியை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் மற்றும் மத்திய அமைச்சர்கள் வரவேற்றனர். இதனையடுத்து செகந்திரபாத்- திருப்பதி இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் அதிவிரைவு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் முன்பதிவு துவங்கியது; ஆன்லைனில் புக் செய்யலாம்!!
வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம்
வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டத்தில் மணிக்கு 180 கிலோமீட்டர் வேகம் வரை சென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஏற்கனவே செகந்திராபாத் - விசாகப்பட்டினம் இடையில் கடந்த ஜனவரி மாதம் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து தற்போது செகந்திராபாத்தில் இருந்து திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். மொத்தமுள்ள 663 கிலோமீட்டர் தூரத்தை 8 மணி நேரத்தில் வந்தே பாரத் ரயில் கடக்கவுள்ளது.
மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில் நகரமான திருப்பதிக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவர்களுக்கு இந்த ரயில் சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் பலத்த பாதுகாப்பு
இந்த வந்தே பாரத் ரயில் திட்டங்களை தொடங்கிவைத்த பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வரவுள்ளார். சென்னை வரும் பிரதமரை வரவேற்க பாஜகவினர் தயார் நிலையில் உள்ளனர். பிரதமர் மோடி மாலை 4 மணி அளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கோவைக்கு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதனையடுத்து நாளை முதுமலை புலிகள் சரணாலத்திற்கு செல்லும் மோடி ஆஸ்கர் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பர்ஸ் பட்த்தில் இடம்பெற்றிருந்த பொம்மன்- பெள்ளி தம்பதியை சந்தித்து பேசவுள்ளார். தமிழகம் வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்பிற்காக 5 அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மன உளைச்சலை ஏற்படுத்தி மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் பயிற்சி மையங்கள்..! அன்புமணி ஆவேசம்