PM Narendra Modi Back to Delhi : பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் மற்றும் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு தற்போது டெல்லி வந்துள்ளார்.

PM Narendra Modi Back to Delhi : பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு அதிபர்டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். கடந்த மாதம் 47ஆவது அதிபராக டிரம்ப் பதிவியேற்றதைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசியுள்ளனர். நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புடன் ஒரு சந்திப்பை நடத்தினார். கிட்டத்தட்ட 4 மணி நேரமாக இரு நாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். இருநாடுகளுக்கும் இடையே பல துறைகளில் கையெழுத்துக்கள் ஏற்பட்டது. வர்த்தகத்தைத் தவிர, பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் புவிசார் அரசியல் ஒத்துழைப்பு ஆகியவற்றில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

MAGA+MIGA=MEGA கூட்டணியை உருவாக்கிய மோடி, டிரம்ப்; அமெரிக்கப் பயணத்தில் என்னவெல்லாம் சாதித்தார் மோடி!!

இது இந்தியா-அமெரிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து 3ஆவது முறையாக இந்திய மக்கள் சேவை செய்ய அனுமதித்துள்ளதாக குறிப்பிட மோடி நாட்டின் வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு 60 ஆண்டுகளுக்கு பிறகு நிகழந்துள்ளது என்று குறிப்பிட்டார். இதே போன்று அமெரிக்க அதிபர் டிரம்பும் 2ஆவது முறையாக அதிபராக பொறுப்பேற்றுள்ளார். டிரம்ப் அதிபராக பதவியேற்ற பிறகு அமெரிக்காவிற்கு வருகை தரும் உலக் தலைவர்களின் பிரதமர் மோடியும் ஒருவர். அமெரிக்காவிற்கு வருகை தந்த பிரதமர் மோடியின் கண்ணோட்டம் குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் கொடுத்தார். அதில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில் மோடி அமெரிக்கா வந்தார். டிரம்ப் 2ஆது முறையாக பதவியேற்ற பிறகு இரு நாட்டு தலைவர்கள் சந்திப்பது இது முதல் முறையாகும்.

டிரம்ப்பின் புதிய வர்த்தகப் போர்: இந்தியாவுக்கு என்ன பாதிப்பு?

இந்த சந்திப்பு இரு நாட்டு உறவுக்கும் அளிக்கும் ஒற்றுமைக்கான சமிக்ஞை. 4 மணி நேரமாக நடைபெற்ற சந்திப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு, வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், எரிசக்தி பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று அவர் கூறினார். இந்த நிலையில் தான் இந்த பயணத்தை வெற்றிகரமாக முடித்து கொண்ட பிரதமர் மோடி தனிவிமானம் மூலமாக டெல்லி வந்து சேர்ந்துள்ளார்.

F35 Fighter Jet ஐ இந்தியாவிற்கு வழங்கும் டிரம்ப்; ரூ.1000 கோடியில் ஜெட் விமானம்; 2000 கிமீ வேகத்தில் பறக்குமா?

Scroll to load tweet…