- Home
- இந்தியா
- F35 Fighter Jet ஐ இந்தியாவிற்கு வழங்கும் டிரம்ப்; ரூ.1000 கோடியில் ஜெட் விமானம்; 2000 கிமீ வேகத்தில் பறக்குமா?
F35 Fighter Jet ஐ இந்தியாவிற்கு வழங்கும் டிரம்ப்; ரூ.1000 கோடியில் ஜெட் விமானம்; 2000 கிமீ வேகத்தில் பறக்குமா?
F35 Fighter Jet to India: பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்ற நிலையில் பயணத்தை சிறப்பாக முடித்த நிலையில் நாளை இந்தியா திரும்புகிறார். அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர் ரொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். அப்போது டொனால்டு டிரம்ப் எஃப் 35 என்ற போர் விமானத்தை இந்தியாவிற்கு கொடுக்க முன் வந்துளளார்.

எஃப் 35 போர் விமானம்
F35 Fighter Jet to India: பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அதில், இந்தியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை வழங்குவதாக அறிவித்தார். இது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த போர் விமானங்களை, அமெரிக்கா தனது நெருங்கிய நட்பு நாடுகளுக்குக் கூட வழங்க தயங்கிய நிலையில் இந்தியாவிற்கு வழங்க முன் வந்துள்ளது. நேட்டோ கூட்டணி நாடான துருக்கிக்குக் கூட இந்த விமானங்களை விற்க மறுத்தது அமெரிக்கா.
ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகளை வாங்கியதால், அமெரிக்கா இந்த முடிவை எடுத்தது. ஆனால், இந்தியா ஏற்கனவே இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்தி வருவதால், நவீன போர் விமானத்தை விற்க முன்வந்துள்ளது அமெரிக்கா. எஃப்-35 போர் விமானம் உலகின் மிகவும் நவீன மல்டி-ரோல் ஸ்டெல்த் ஜெட் விமானமாக அறியப்படுகிறது.
இது ஸ்டெல்த், உயர்ந்த சென்சார்கள், நெட்வொர்க்கிங் அமைப்புகள், நவீன ஆயுத அமைப்புகளின் கலவையால் போர்க்களத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதுவரை இந்த போர் விமானம் அமெரிக்கா, இங்கிலாந்து, இஸ்ரேல், ஜப்பான் உள்ளிட்ட சில நாடுகளில் மட்டுமே உள்ளது. இப்போது இந்தப் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது.
எஃப் 35 விமானத்தின் சிறப்பம்சங்கள்:
இந்தப் போர் விமானத்தில் எஃப் 135 என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. 40,000 பவுண்டுகள் உந்துதலை உருவாக்குவது இந்த விமானத்தின் சிறப்பம்சம். இந்த விமானம் மணிக்கு 1975 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது. மேலும், வான் பாதுகாப்பு அமைப்புகளின் கண்களில் படாமல் பயணிக்கும். ரேடார்களுக்குக் கூட இந்த விமானத்தைக் கண்டுபிடிப்பது எளிதல்ல. இது ஒரு சிறிய சிக்னலை மட்டுமே உருவாக்குகிறது. இதனால் எதிரிகளின் கண்களில் எளிதில் படாது. இந்த விமானத்தை அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் மற்ற இரண்டு நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்துள்ளது. விமானத்தின் உள்ளே நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விமானத்தை இயக்கும் விமானிக்கு ஹெல்மெட் மவுண்டட் டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இதன் மூலம் அவர்களுக்கு நிகழ்நேரத் தகவல்கள் கிடைக்கும். இந்த ஹெல்மெட்டின் விலை மட்டும் சுமார் ரூ.34 கோடி. இதிலிருந்தே இதில் எவ்வளவு நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இந்த விமானம் 6 முதல் 8.1 டன் எடையுள்ள ஆயுதங்களைச் சுமந்து செல்லும். இந்த விமானத்தின் பராமரிப்பு மிகவும் விலை உயர்ந்தது. இந்த விமானம் ஒரு மணி நேரம் பறந்தால், சுமார் 36,000 டாலர்கள், அதாவது இந்திய ரூபாயில் சுமார் ரூ.31 லட்சம் எரிபொருள் செலவாகும். இந்த விமானங்களை இயக்க, விமானிகள் சிறப்புப் பயிற்சி பெற வேண்டும்.
மூன்று வகைகள்:
எஃப்-35 ஸ்டெல்த் ஜெட் மூன்று வகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* முதல் வகை எஃப்-35A. இதன் விலை இந்திய ரூபாயில் ரூ.695 கோடி.
* 2ஆவது வகை எஃப்-35B. இதன் விலை ரூ.990 கோடி. இந்த விமானத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ஓடுபாதை இல்லாமலேயே செங்குத்தாக மேலே சென்று தரையிறங்க முடியும்.
* 3ஆவது வகை எஃப்-35C, விமானம் தாங்கி கப்பல்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பல பாதுகாப்பு மற்றும் உயர் தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளன. இதன் விலை ரூ.955 கோடிக்கு மேல் என்பது குறிப்பிடத்தக்கது.