G-20 Summit 2022:ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இந்தோனேசியா பயணம்: ஆலோசிக்கப்படும் அம்சங்கள்?

இந்தோனேசியாவின் பாலி நகரில் 15 மற்றும் 16ம்(நாளை, நாளைமறுநாள்) தேதிகளில் நடக்கும் ஜி20 நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார். 

PM Modi will attend three crucial G20 meetings in Bali; focus will be on food and energy security.

இந்தோனேசியாவின் பாலி நகரில் 15 மற்றும் 16ம்(நாளை, நாளைமறுநாள்) தேதிகளில் நடக்கும் 17-வது ஜி20 நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று புறப்படுகிறார். 

இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரச் சூழல், பணவீக்கம்,பருவநிலை மாற்றம், எரிபொருள் சிக்கல், உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உலகத் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.

G-20 Summit 2022: 17-வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்

பாலி தீவில் உள்ள நுசா துவா எனும் தீவு ஹோட்டலில் உலகத் தலைவர்கள் இன்று முதல் கூட உள்ளனர்.

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரால் உலக நாடுகள் பல எரிபொருள், உணவுப் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத்ததடை விதித்துள்ள நிலையில் இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்கிறது. இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் பங்கேற்கவில்லை, அவருக்குப் பதிலாக ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டும்  பங்கேற்கிறார். 

ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் அடங்கியுள்ளன.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று தனி விமானத்தில் இந்தோனேசியா புறப்படுகிறார். இந்த மாநாட்டின்போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி பேச்சு நடத்த உள்ளார். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பிரதமர் மோடி பேசுவாரா என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லை. 

ஜி20 மாநாடு லோகோவில் 'தாமரை'ச் சின்னம்!விளாசும் காங்கிரஸ் :பாஜக பதிலடி

இந்த மாநாட்டின் முடிவில் அடுத்த ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். ஏற்கெனவே அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டுக்கான இலச்சினை, இணையதளம், உள்ளிட்டவற்றை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். இது அதிகாரபூர்வமாக இந்த மாநாட்டின்போது அறிவிக்கப்படும்.

PM Modi will attend three crucial G20 meetings in Bali; focus will be on food and energy security.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, இந்தியாவின் சார்பில் உலக நாடுகள் சந்தித்துவரும் சுகாதாரப் பிரச்சினைகள், உணவுப் பிரச்சினைகள், பருவநிலை மாறுபாடு, உணவுப் பாதுகாப்பு, கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி சிக்கல் ஆகியவற்றை முன்வைத்து பேச உள்ளார்

இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரி்ட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான்உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள். 

வெளியுறவுத்துறை செயலாளர் வினய் கவாத்ரா கூறுகையில் “ ஜி20 மாநாட்டின்போது பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பேச உள்ளார். உணவுப் பாதுப்பு, எரிபொருள் சிக்கல், டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேச உள்ளார். 

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

இது தவிர சுற்றுச்சூழல், வேளாண்மை, சுகாதாரம், டிஜிட்டல் மாற்றம் ஆகியவை குறித்தும் மாநாட்டில் ஆலோசிக்கப்பட உள்ளது. உலக நாடுகள் சந்தித்துவரும் பல்வேறு சவால்களை எவ்வாறு கடந்து வருவது குறித்து இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டு தீர்வு காணப்படும். 

இந்த மாநாட்டின்போது, அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்க உள்ளார். பாலியில் உள்ள மாங்ரோவ் காடுகளான பாஷா இந்தோனேசியா, தமான் ஹுதன் ராயா காடுகளையும் உலகத் தலைவர்கள் பார்வையிடுகிறார்கள்” எனத் தெரிவித்தார்
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios