ஜி-20 கூட்டமைப்பின் தலைமையாக இந்தியா வர இருக்கும் நிலையில், அதற்குரிய லட்சிணையில் தாமரை சின்னம் இருப்பது குறித்து பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
ஜி-20 கூட்டமைப்பின் தலைமையாக இந்தியா வர இருக்கும் நிலையில், அதற்குரிய லட்சிணையில் தாமரை சின்னம் இருப்பது குறித்து பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலி தீவில் ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் மாநாடு வரும் 15 மற்றும் 16ம் தேதியில் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.
ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

இந்த ஜி-20 கூட்டமைப்பு மாநாடு முடிந்ததும், அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், அதற்கான லட்சினை, கருத்துரு, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம், உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும்.
ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் “இந்திய தேசியக் கொடியில் உள்ள உற்சாகமூட்டும் வண்ணங்களான காவிநிறம், வெள்ளை , பச்சை, நீலம் ஆகியவற்றை வைத்து டி20 லட்சினை வரையப்பட்டுள்ளது. சவால்களுக்கு மத்தியில் வளர்ச்சியை பிரதிபலிக்கும் இந்தியாவின் தேசிய மலரான தாமரையுடன் பூமியை இணைக்கிறது” எனத் தெரிவித்திருந்தது
பாஜகவின் தாமரைச் சின்னத்தை ஜி-20 லட்சினையில் வைக்கப்பட்டது குறித்து காங்கிரஸ் கட்சி பாஜகவை விமர்சித்தள்ளது. தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் எந்த வாய்ப்பையும் பாஜகவும், அதன் தலைவர்களும் தவறவிடுவதில்லை என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.

நம்ம பிரதமர் மோடி மூளையே மூளைதான்.. சீனா பாகிஸ்தானை டரியல் ஆக்கும் சம்பவம்... காஷ்மீரில் G20 மாநாடு
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ 70 ஆண்டுகளுக்கு முன், காங்கிரஸ் கட்சியின் கொடியை தேசியக் கொடியாக கொண்டுவர முன்மொழியப்பட்டபோது அதை முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு நிராகரித்தார்.
இப்போது, ஜி20 கூட்டமைப்புக்கு இந்தியா தலைவராக வரும்போது, பாஜகவின் தேர்தல் சின்னம்தான், லட்சினையாக வருகிறது. அதிர்ச்சியாக இருக்கிறது, பிரதமர் மோடியும், பாஜகவும் மோடியும் பாஜகவும் வெட்கமின்றி தங்களைத் தாங்களே உயர்த்திக் கொள்ளும் எந்த வாய்ப்பையும் இழக்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும்”
இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
பாஜக செய்தித்தொடர்பாளர் ஷேசாத் பூனாவல்லா காங்கிரஸ் கட்சிக்கு பதிலடி கொடுத்துள்ளார். ட்விட்டரில் பூனாவல்லா பதிவிட்டகருத்தில் “ தாமரை என்பது நம்முடைய தேசிய மலர். மகா லட்சுமி அமரும் இடமாக தாமரை கருதப்படுகிறது. அப்படியென்றால் தேசிய மலருக்கு காங்கிரஸ் எதிர்ப்புத் தெரிவிக்கிறதா. கமல்நாத் என்ற பெயரில் இருந்து கமல்(தாமரை) என்ற வார்த்தை நீக்குவீர்களா. ராஜீவ் என்ற வார்த்தையும் தாமரையைத்தான் குறிக்கும். அந்தப் பெயரில் உள்நோக்கம் ஏதும் இல்லையா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
