Asianet News TamilAsianet News Tamil

G-20 Summit 2022: 17-வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இந்தோனேசியா பயணம்

17-வது ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் இந்தோனேசியா நாட்டுக்குப் புறப்படுகிறார்.

PM Modi will travel to Indonesia for the G-20 Summit next week.
Author
First Published Nov 11, 2022, 1:45 PM IST

17-வது ஜி-20 கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த வாரம் இந்தோனேசியா புறப்படுகிறார். 

இந்தோனேசியாவின் பாலி நகரில் வரும் 14ம் தேதி முதல் 16ம் தேதிவரை 17-வது ஜி-20 கூட்டமைப்பு நாடுகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டின் தலைவராக தற்போது இந்தோனேசியா உள்ளது. 

ஜி20 மாநாடு லோகோவில் 'தாமரை'ச் சின்னம்!விளாசும் காங்கிரஸ் :பாஜக பதிலடி

இந்தோனேசியா அதிபர் ஜோக்கோ விடோடோ அழைப்பின் பெயரில், பிரதமர் மோடி, ஜி20 மாநாட்டில் பங்கேற்கப் புறப்படுகிறார். இந்த மாநாட்டின்போது, அடுத்த ஆண்டு ஜி20 மாநாட்டின் தலைமைப் பொறுப்பேற்கும் இந்தியாவிடம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். பிரதமர் மோடியிடம், தலைமைப் பொறுப்பே இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ வழங்குவார்.

PM Modi will travel to Indonesia for the G-20 Summit next week.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்வெளியிட்ட அறிவிப்பில் “ இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 14 முதல் 16ம் தேதிவரை நடக்கும், 17வது ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசிய அதிபர் அழைப்பில் பெயரில் பிரதமர் மோடி செல்கிறார்” எனத் தெரிவித்துள்ளது.

ஜி-20 மாநாடு: உலகத் தலைவர்களுக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ள பொருட்கள் என்ன?

இந்த மாநாட்டின் இடையே, உலகத் தலைவர்கள் உலகம் எதிர்கொண்டு வரும் முக்கிய பிரச்சினைகள், சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க உள்ளனர். “ஒன்றாக மீண்டெளுவோம், வலிமையாக மீண்டெளுவோம்” என்ற கருத்துருவில் 17வது ஜி20 மாநாடு நடக்கிறது. உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பு, சுகாதாரம், டிஜிட்டல் பரிமாற்றம் ஆகியவை முக்கிய அம்சங்களாக மாநாட்டில் பேசப்படஉள்ளது.

 

ஜி-20 கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா,ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென் கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகளும், ஐரோப்பிய யூனியனும் அடங்கியுள்ளன. 

ஜி20 நாடுகளுக்கு தலைமையேற்கும் இந்தியா.. மத்திய அரசு அறிவிப்பு !

இந்த ஜி-20 கூட்டமைப்புக்கு அடுத்த ஓர் ஆண்டுக்கு இந்தியா தலைமைப் பொறுப்பேற்க உள்ளது. வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் அந்தப் பொறுப்பை இந்தியா ஏற்கும் நிலையில், அதற்கான லட்சினை, கருத்துரு, இணையதளம் ஆகியவற்றை பிரதமர் மோடி ஏற்கெனவே வெளியிட்டுள்ளார்.

ஓர் ஆண்டு தலைமைப் பொறுப்பில் இருக்கும் இந்தியா, உலகளாவிய பிரச்சினைகளான பருவநிலை மாறுபாடு, தீவிரவாதப் பிரச்சினை, கடன்பிரச்சினை, கொரோனா தாக்கம்,  உள்ளிட்டவற்றுக்கு தீர்வு காண முயலும்.

Follow Us:
Download App:
  • android
  • ios