வெப்ப அலையை எதிர்கொள்ள ரெடியா? பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை!

நாட்டில் வெப்ப அலையை எதிர்கொள்வது தொடர்பான தயார்நிலை குறித்து பிரதமர் மோடி இன்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

PM Modi reviews preparedness for heat wave related situation sgb

எதிர்வரும் கோடை கால வெப்ப அலை சீசனை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து ஆலோசனை செய்வதற்கான கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.

2024ஆம் ஆண்டில் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்திற்கான வெப்பநிலைக் கண்ணோட்டம், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பான மற்றும் அதிகபட்ச வெப்பநிலை கணிப்புகள், மத்திய இந்தியா மற்றும் மேற்கு தீபகற்ப இந்தியாவில் அதிகபட்ச வெப்ப அலை தாக்கம் ஆகியவை குறித்து கூட்டத்தில் பிரதமருக்கு விளக்கப்பட்டது.

சுகாதாரத் துறையில் அத்தியாவசிய மருந்துகள், ஊசிகள், ஐஸ் கட்டிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயார்நிலையில் வைத்திருப்பது குறித்தும் பிரதமர் மோடி அதிகாரிகளினம் கேட்டறிந்தார்.

11 கேள்விக்கு பதில் சொல்லிட்டு ஊருக்குள்ள வாங்க... பாஜகவுக்கு ஷாக் கொடுக்கும் விவசாயிகள்!

தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக ஊடகங்கள் போன்ற அனைத்து தளங்களிலும், பிராந்திய மொழிகளில் விழிப்புணர்வுப் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடக்கும் நேரத்தில் கோடைக்காலம் இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் வழங்கிய அறிவுரைகளை பிராந்திய மொழிகளில் வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அரசின் அனைத்து துறைகளும், பல்வேறு அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார். மருத்துவமனைகளில் போதிய தயாரிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். காட்டுத் தீ ஏற்பட்டால் அதனை விரைவாகக் கண்டறிந்து அணைக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.

பிரதமரின் முதன்மைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

ஜி Pay பண்ணுங்க மோடியின் மோசடிகளைத் பாருங்க! திமுகவின் ஹைடெக் தேர்தல் பிரச்சாரம்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios