Asianet News TamilAsianet News Tamil

பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை…..

passport
Author
First Published Dec 24, 2016, 4:58 AM IST
பாஸ்போர்ட் பெற பிறப்புச் சான்றிதழ் கட்டாயமில்லை…..

பாஸ்போர்ட் பெறுவதற்கு இனி விண்ணப்பத்தில் பிறப்புச்சான்றிதழ் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை என பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாகி, பல விதிமுறைகளை தளர்த்தியது மத்திய அரசு.

கடந்த 1989-ம் ஆண்டு, ஜனவரி 26-ந்தேதிக்கு பின் பிறந்தவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் பெறும் விண்ணப்பத்தோடு பிறப்புச்சான்றிதழ் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. அது இப்போது தளர்த்தப்பட்டுள்ளது.  மேலும், பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது 15 ஆவணங்கள் இணைக்கப்பட்ட நிலையில் இருந்து, 9 ஆவணங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.கே.சிங் பாஸ்போர்ட்விதிமுறைகள் தளர்த்தப்பட்டது குறித்து நேற்று அறிவிப்பு வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது-

பாஸ்போர்ட் பெறுவதை எளிமையாகவும், ஒழுங்குபடுத்தவும், வேகமாகவும் கிடைக்க அரசு ஏராளமான நடவடிக்கைகள் எடுத்துவவுகிறது. இது இந்திய மக்கள் பாஸ்போர்ட்டை விரைவாகப் பெற உதவும்.

அதன்படி, பாஸ்போர்ட் பெறும்போது, அரசு ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் துறை அதிகாரிகளிடம் இருந்து தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக சுயசான்று அளிக்கப்பட்ட கடிதத்தை தனது மூத்த அதிகாரிகளிடம் முன்கூட்டியே அளிக்கலாம்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் போது, விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ் இணைக்க வேண்டிய கட்டாயமில்லை. அதற்கு பதிலாக பள்ளி,கல்லூரி டி.சி., பான்கார்டு, ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, எல்.ஐ.சி. காப்பீடு பத்திரம் ஆகியவற்றின் நகலை இணைக்கலாம்.

அதேபோல, தத்து எடுக்கப்பட்ட குழந்தையாக இருந்தால், தந்தையின் பெயரை குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு  பதிலாக யாருடன் அந்தகுழந்தை இருக்கிறதோ அவர்களின் பெயரை மட்டும் குறிப்பிடலாம்.

திருமணமான தம்பதிகள் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் போது, திருமணச் சான்றிதழை இணைக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு பதிலாக யாராவது ஒருவரின் பெற்றோரின் பெயரை மட்டும் குறிப்பிடலாம். அதேபோல தம்பதிகள் தங்கள் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கும் போதும், தாய் அல்லது தந்தையின் பெயரைபாஸ்போர்ட்டில் அச்சிடுவது தேவையில்லை.

தாய்,தந்தை இல்லாத ஆதரவற்ற குழந்தைகள் பிறப்புச்சான்றிதழ் இல்லாவிட்டால், பிறந்ததேதி இருக்கும் பள்ளிச்சான்றிதழ், தத்து எடுக்கப்பட்டபோது, குழந்தைகள் காப்பகத்தில் இருந்து அளிக்கப்பட்ட கடித்ததில் குறிப்பிடப்பட்டு இ ருக்கும் பிறந்ததேதி ஆகியவை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், சன்யாசிகள், சாதுக்கள் ஆகியோரின் கோரிக்கையே ஏற்று, பாஸ்போர்ட்  விண்ணப்பிக்கும் போது, அவர்கள் தங்களின் பெற்றோர்களின் பெயரைக் குறிப்பிடுவதற்கு பதிலாக குருவின் பெயரைக் குறிப்பிடலாம். அதே சமயம், அவர்கள் பான்கார்டு, ஆதார்கார்டு, குருவின் பெயர் குறித்த ஆவணம் என இதில் ஏதாவது ஒன்றை இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios