காஷ்மீர் எல்லையில் அத்துமீறி  துப்பாக்கிச் சூடு நடத்திய பாகிஸ்தான் படையின் மீது இந்தியா பாதுகாப்பு படையினர்  பதில் தாக்குதல் நடத்தினர், இத்தாக்குதல் சம்பவம் இந்திய பாகிஸ்தான் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது .   இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் இணைந்து அடிக்கடி  ராணுவத்தின் மீதும் இந்திய பகுதிகளின் மீது தாக்குதல் நடத்திவருகிறது.  போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி  பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது . 

காஷ்மீர் சிறப்பு  அந்தஸ்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தியாவுடன்  வெளிப்படையாக  மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது  பாகிஸ்தான் , முன்னதாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் பயிற்சி முகாம் அமைத்து மேற்கொண்டு வந்த பால்கோட் பகுதிக்குள் நுழைந்து இந்தியா விமானப்படை தீவிரவாத முகாம்கள் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்தியது அதைத் தொடர்ந்து எல்லையில் இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது . இந்நிலையில் ஒரளவுக்கு  பதற்றம் தணிந்திருந்த நிலையில் மீண்டும் பாக் ராணுவம் அத்து மீறி உள்ளது.

 

ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள தார்குன்டி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகள் மற்றும் எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று பிற்பகல் சுமார்   1.30 மணியளவில் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர் .  இந்திய இரணுவமும்  இந்த தாக்குதலுக்கு பதிலடி  கொடுத்தனர் .  இதில் இரு தரப்பு சண்டையில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை . இந்திய ராணுவ பாதுகாப்பு படையின் பதில் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவ துருப்புகள்  பின்வாங்கியது என தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.