ஒரு புலியைக்கூட காணவில்லை! பந்திப்பூர் போய் ஏமாந்த பிரதமர் மோடி!
பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்குச் சென்று 2 மணிநேரம் ஜீப்பில் சுற்றித் திரிந்த பிரதமர் மோடி ஒரு புலியைக்கூடப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கர்நாடக மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் வனப்பகுதியைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஒரு புலியைக்கூட காண முடியாமல் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பினார். இதனை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மற்றும் மைசூரு மாவட்டங்களில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் பரந்து விரிந்து காணப்படுகிறது. கடந்த 8,9 ஆம் தேதிகளில் தென்னகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட பிரதமர் மோடி ஏப்ரல் 9ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பந்திப்பூரில் புலிகள் காப்பகத்தின் வனப்பகுதியில் 22 கி.மீ. ஜீப் சவாரி செய்தார்.
வேண்டாம்! கோமியம் குடிப்பது உடம்புக்கு நல்லதல்ல: கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை
காலை 7 மணிக்கு காப்பகத்துக்கு வந்த பிரதமர் பணியின் போது உயிரிழந்த வனத்துறை ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு டீ குடித்தார். வனத்துறையின் மாக்கி சட்டை, கறுப்பு தொப்பி, ஜாக்கெட் ஆகியவற்றை அணிந்து ஜீப்பில் கிளம்பினார். 10 இருக்கைகள் கொண்ட திறந்த ஜீப்பில் பயணித்த அவருடன் ஓட்டுநர், பாதுகாப்பு அதிகாரிகள் என மேலும் 3 பேரும் இருந்தனர். பாதுகாப்புப் படையின் 7 வாகனங்கள் பிரதமரின் ஜீப்பை பின்தொடர்ந்தன.
பிரதமர் மோடி ஜீப் சவாரி செய்தபோது ஒரு புலியையும் காணவில்லை. சிறுத்தையையும் பார்க்க முடியவில்லை. சுமார் 2 மணிநேரம் 22 கி.மீ. தூரம் சுற்றியும் புலியையோ சிறுத்தையையோ காணவில்லை. வேறு பாதையில் சென்று புலியைப் பார்க்கலாம் என்று வனத்துறையினர் கூறினர். பிரதமருடன் பாதுகாப்புக்கு வந்த எஸ்.பி.ஜி. குழுவினர் முன்பே தீர்மானிக்கப்பட்ட பாதையைத் தவிர வேறு பாதையில் செல்ல அனுமதிக்கவில்லை.
மின்சார வாகனச் சந்தையில் புதிய மைல்கல்! ஓராண்டில் 11 லட்சம் வாகனங்கள் விற்பனை
புலிகளை காணமுடியாமல் ஏமாந்தாலும் யானை, காளை, மான், உடும்பு என வேறு பல காட்டுயிர்களைப் பார்த்து போட்டோ எடுத்தார் பிரதமர் மோடி. தான் வருவதற்கு முன் எஸ்.பி.ஜி. குழுவின் பாதுகாப்பு ஒத்திகை புலிகளை தொந்தரவு செய்திருக்கலாம் பிரதமர் தெரிவித்தார் என்று வனத்துறை அதிகாரிகள் சொல்கின்றனர்.
கோடைக் காலம் என்பதால், காலை 6 மணி முதல் 8 மணி வரைதான் புலியைப் பார்க்க முடியும். அல்லது மாலை நேரத்தில் பார்க்கலாம். பிரதமர் சவாரியைத் தொடங்கியபோதே நேரம் காலை 7.45 ஆகிவிட்டது. இதனால்தான் புலி எங்கும் தென்படவில்லை" என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர். பிரதமர் வருவதை முன்னிட்டு ஏப்ரல் 6ஆம் தேதி முதலே பந்திப்பூரில் பொதுமக்கள் வன உலா செல்ல தடை விதிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
திருப்பதி கோயிலுக்கு 250 ஏக்கர் விவசாய நிலம் நன்கொடை அளித்த பக்தர்
வனப்பகுதியில் இருந்து திரும்பும் வழியில் போல்குடா வியூ பாயிண்ட்டில், சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். தொலைநோக்கி வைத்து வனப்பகுதியைக் கண்டு களித்தார். வன ஊழியர்களுடன் உரையாடிய பிரதமர், கெக்கனஹல்லா சோதனைச் சாவடியில் 30 வயது யானையின் உயிரைக் காப்பாற்றிய குண்ட்லுப்பேட்டை ஏசிஎஃப் ரவீந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளை பாராட்டினார். அவர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.
பந்திப்பூர் காட்டில் பிரதமர் மோடியுடன் பயணித்த தமிழர்! என்ன சொன்னார் தெரியுமா?