Asianet News TamilAsianet News Tamil

பந்திப்பூர் காட்டில் பிரதமர் மோடியுடன் பயணித்த தமிழர்! என்ன சொன்னார் தெரியுமா?

பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் வன உலா சென்றபோது அவருடன் இருந்து சுற்றிக்காட்டியவர் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் ஐ.எப்.எஸ். அதிகாரி ரமேஷ் குமார்.

Ramesh Kumar, IFS officer who travelled with PM Modi in Bandipur tiger reserve
Author
First Published Apr 11, 2023, 11:07 AM IST | Last Updated Apr 11, 2023, 11:07 AM IST

பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்குச் சென்றபோது புதுச்சேரியைச் சேர்ந்த தமிழர் ரமேஷ்குமார் ஐ.எப்.எஸ். அவருக்கு வனப்பகுதியைச் சுற்றிக்காட்டினார்.

கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தார். அப்போது ஜீப்பில் சரணாலய வனப்பகுதியைச் சுற்றிப் பார்த்தார். 22 கி.மீ. தொலைவுக்கு நீடித்த இந்தப் பயணத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த தமிழ் அதிகாரியும் உடன் இருந்தார்.

அவர்தான் பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தின் இயக்குநரும் ஐ.எப்.எஸ். அதிகாரியுமான ரமேஷ் குமார். புதுச்சேரியை சேர்ந்த இவர் 2008ஆம் ஆண்டு ஐ.எப்.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி பெற்றவர். இவர் பிரதமருடன் பயணித்தபோது சரணாலயத்தைப் பற்றி தகவல்களைப் பிரதமருக்கு எடுத்துக் கூறினார். சிறப்பாக செயல்பட்ட அவருக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

வேண்டாம்! கோமியம் குடிப்பது உடம்புக்கு நல்லதல்ல: கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை

Ramesh Kumar, IFS officer who travelled with PM Modi in Bandipur tiger reserve

30 யானைகள், 25 இந்திய காட்டு எருமைகள், 40 சாம்பல் நிற மான்கள், 200க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் என பல வன உயிரினங்களை பிரதமர் மோடி கண்டு மகிழ்ந்தார். ஆனால், மோடி சுற்றிப் பார்த்தபோது சரணாலயத்தில் எங்கும் புலி தென்படவில்லை என்று கூறப்படுகிறது.

"பிரதமர் வருகையை முன்னிட்டு 5 நாட்களாக பாதுகாப்பு அதிகாரிகள் தினமும் சரணாலய வனப்பகுதியில் பரிசோதனை செய்தனர். பாதுகாப்பு ஒத்திகையும் நடத்தப்பட்டது. தொடர்ச்சியாக அதிகமான வாகனங்கள் அந்தப் பகுதியில் வலம்வந்ததால் புலிகள் அடர்வனப் பகுதிக்குச் சென்றிருக்கலாம்" என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.

பிரதமர் மோடி பந்திப்பூர் புலிகள் காப்பகத்துக்கு வந்தது அங்கிருக்கும் பணியாளர்களுக்கு உற்சாகம் அளிப்பதாக உள்ளதாகக் கூறுகின்றனர். இதனால் பந்திப்பூரில் சுற்றுலா வளர்ச்சி அடையும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மின்சார வாகனச் சந்தையில் புதிய மைல்கல்! ஓராண்டில் 11 லட்சம் வாகனங்கள் விற்பனை

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios