அசாமில் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் பெற்றோர்களுக்கு அரசு வேலை கிடையாது என அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் கொள்கையை நடைமுறைப்படுத்த அசாம் மாநில அரசு கடந்த 2017-ம் ஆண்டு முடிவு செய்தது. இந்த மக்கள் தொகை கொள்கை மூலம் அசாம் மாநிலத்தில் அதிக குழந்தைகள் இல்லாமல் இருக்கும் சிறிய குடும்பத்திற்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வந்தது. இந்தச் சூழலில் மக்கள் தொகை தொடர்பாக அம்மாநில அமைச்சரவை ஒரு புதிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளது. 

இதையும் படிங்க;- மோசடி புகாரில் கருணாநிதி பேரன் கைது... அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்ட செல்வி..!

நேற்று மாலை அசாம் மாநில அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மக்கள் தொகை தொடர்பாக ஒரு புதிய உத்தரவை அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதில், அசாம் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்களுக்கு  இனி அரசு வேலை வழங்குவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அதிரடி திட்டம், 2021ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இதேபோல், வீடு இல்லாதவர்களுக்கு நிலம் வழங்கும் புதிய கொள்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, நிலமற்ற பழங்குடியின மக்களுக்கு  விவசாயத்திற்காக 43,200 சதுரஅடி நிலமும், வீடு கட்டுவதற்கு நிலமும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.