ஐஎஸ்ஐஎஸ் சதி வழக்கில் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிராவில் பல இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.

இஸ்லாமிய அரசு - கொராசன் மாகாணம் (ISKP) இந்தியாவில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கான சதி செய்த தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனை முறியடிப்பதற்க்காக மத்தியப் பிரதேசத்தின் சியோனியில் உள்ள நான்கு இடங்களிலும், மகாராஷ்டிராவின் புனேவில் ஒரு இடத்திலும் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) சனிக்கிழமை சோதனை நடத்தியது. ஞாயிறுக்கிழமை, என்ஐஏ குழுக்கள் புனேவில் உள்ள தல்ஹா கான் மற்றும் சியோனியில் உள்ள அக்ரம் கானின் வீடுகளில் சோதனை நடத்தினர்.

டெல்லியில் உள்ள ஓக்லாவில் இருந்து காஷ்மீரி தம்பதிகளான ஜஹான்சைப் சாமி வானி மற்றும் அவரது மனைவி ஹினா பஷீர் பீக் ஆகியோர் கைது செய்யப்பட்ட பின்னர், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் இந்த வழக்கு முதலில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஜோடி ISKP உடன் இணைந்திருப்பது கண்டறியப்பட்டது.

இதையும் படிங்க..12ம் வகுப்பு பொதுத்தேர்வு - மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்னென்ன.? முழு விபரம்

விசாரணையில், மற்றொரு குற்றவாளியான அப்துல்லா பாசித்தின் சதி செயலும் வெளிப்பட்டது. என்ஐஏ விசாரித்து வரும் மற்றொரு வழக்கில் பாசித் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நாளில், ஷிவ்மோகா ஐஎஸ் சதி வழக்கில் சியோனியில் உள்ள மற்ற மூன்று இடங்களில் என்ஐஏ சோதனை செய்தது. சந்தேக நபர்களான அப்துல் அஜிஸ் சலாபி மற்றும் ஷோப் கான் ஆகியோரின் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்கள் சோதனையிடப்பட்ட இடங்களில் அடங்கும்.

ஏற்கனவே சிவமோகா வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் முகமது ஷாரிக், மாஸ் முனீர் கான், யாசின் மற்றும் பலரும் இதில் அடங்குவார்கள். மௌலானா அஜீஸ் சலாபி தலைமையிலான குழு, யூடியூபில் ஆத்திரமூட்டும் மற்றும் ஆவேசமான பேச்சுகள் மூலம் மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் பல தென் மாநிலங்களின் இளம் முஸ்லிம்களை தீவிரமயமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அவர்கள் சியோனி மாவட்டத்தில் தீவிரமான நபர்களை ஒன்றிணைக்க முயன்றனர் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க..தமிழகத்தில் பாஜகவினர் உயிருடன் இருக்க முடியாது.. ஆளும் கட்சி ஆணவமா.? முற்றும் திமுக Vs பாஜக மோதல் விவகாரம்