Asianet News TamilAsianet News Tamil

கொரோனா பாதிப்புக்கு புதிய சிகிச்சை முறையைக் கண்டுபிடித்த இந்திய மருத்துவர்... பால் வார்க்கும் மருத்துவர்!

“கொரோனா நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். பொதுவாக நோயெதிர்ப்பு மண்டலத்தைதான் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் பாதிக்கிறது. என்னுடைய சிகிச்சை முறை என்பது, நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். என்னுடைய சிகிச்சை முறையின் மூலம் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடும்."

New treatment way discoverd by indian doctor for corona virus
Author
Bangalore, First Published Mar 28, 2020, 9:24 PM IST

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறந்த சிகிச்சை முறை ஒன்றைக்  கண்டுபிடித்துள்ளதாக பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் அறிவித்துள்ளார். New treatment way discoverd by indian doctor for corona virus
கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவருகிறது. 196 நாடுகளில் கடை பரப்பி உட்கார்ந்துள்ள அந்த வைரஸால், 6 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 28 ஆயிரம் பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் இந்தியாவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை வைரஸ் பாதிப்பால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 933 பேர் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொடிய வைரஸான கொரோனாவை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.

New treatment way discoverd by indian doctor for corona virus
இந்நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சிறந்த சிகிச்சை முறை ஒன்றைக்  கண்டுபிடித்ததாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியுள்ள தகவலில், “கொரோனா நோயாளிகளின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் வகையில் ஊசி மூலம் வழங்கக்கூடிய சைட்டோகைன்களை நாங்கள் தயாரித்துள்ளோம். பொதுவாக நோயெதிர்ப்பு மண்டலத்தைதான் சார்ஸ்-கோவ் -2 வைரஸ் பாதிக்கிறது. என்னுடைய சிகிச்சை முறை என்பது, நோயாளியின் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்காக செயல்படும். என்னுடைய சிகிச்சை முறையின் மூலம் நோயாளியின் உடல் கொரோனா வைரஸுடன் வலுவாக போராடும். New treatment way discoverd by indian doctor for corona virus
இந்த மருந்து கொரோனா வைரஸின் தடுப்பூசி அல்ல. நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதாகும். இந்த ஆய்வில் நாங்கள் மிகவும் ஆரம்ப கட்டத்தில்தான் இருக்கிறோம். இதன் முதல் தொகுப்பு ஒரு வாரத்துக்குள் தயாராகிவிடும்” என்று டாக்டர் விஷால் ராவ் கூறியிருக்கிறார். இந்தக் கண்டுபிடிப்பு சரியான திசையில் சென்றால், கொரோனா வைரஸ் சிகிச்சையில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios