Hit and Run விவகாரம்.. டிரக் ஓட்டுநர்கள் நடத்திய தீடீர் போராட்டம் - மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியால் வாபஸ்!
New Delhi : இந்திய நீதித்துறை சட்டத்தின் ஹிட் அண்ட் ரன் வழக்கிற்கு இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது. ஹிட் அன்ட் ரன் கேஸ் என்ற புதிய விதிமுறைக்கு எதிராக நாடு முழுவதும் டிரைவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர் என்பது அனைவரும் அறிந்ததே.
சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் Hit and run (விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் செல்வது) விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பல இடங்களில் டிரக் ஓட்டுனர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இது இந்திய அளவில் பெரும் பிரச்சனையாக மாறியது.
இந்நிலையில் ஓட்டுனர்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டப்பிரிவு தற்போதைக்கு அமல்படுத்தப்படாது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மத்திய அரசு உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை திரும்ப பெறுவதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஓட்டுனர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
வோட் ஆன் அக்கவுண்ட் என்றால் என்ன? மோடி அரசு பொதுத் தேர்தலைச் சந்திக்க கை கொடுக்குமா?
நாடு முழுவதும் லாரி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில், லாரி ஓட்டுநர்கள் பணிக்குத் திரும்புமாறு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. புதிய சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பு லாரி டிரைவர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருடனும் பேச மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கூறுகையில், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் நாங்கள் விவாதித்துள்ளோம். புதிய விதி இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்பதை அரசு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நீதித்துறை சட்டம் 106/2ஐ அமல்படுத்துவதற்கு முன், அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் ஆலோசித்து, அதன்பிறகுதான் எந்த முடிவும் எடுப்போம் என்று உள்துறை அமைச்சகம் சார்பில் கூறுகிறோம் என்றார் அவர்.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை: அரசு துறைகளுக்கு இமாச்சல் முதல்வர் உத்தரவு!