சிறையில் முறையான உணவு இல்லாமல் 28 கிலோ எடை குறைந்துவிட்டதாக டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் எழுப்பப்பட்டது.
சிறையில் முறையான உணவு இல்லாமல் 28 கிலோ எடை குறைந்துவிட்டதாக டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் தரப்பில் நீதிமன்றத்தில் புகார் எழுப்பப்பட்டது.
ஆனால், திஹார் சிறையில் பழங்கள், சாலட், உணவுகள் என் வகைவகையாக சத்யேந்திர ஜெயின் சாப்பிடுவதற்காக வைக்கப்பட்ட புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன
சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்
சிறையில் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு முறையான உணவுகள் தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பொய்யானது. இந்த சிசிடிவி காட்சிகள்அனைத்தும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் எடுக்கப்பட்டவை, அமைச்சர் 28 கிலோ உடல் எடை குறையவில்லை. மாறாக 8 கிலோ எடை அதிகரி்துள்ளது என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் இருக்கும் டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயினுக்கு சிறையில் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. சத்தியேந்திர ஜெயினுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், உண்மையில் சத்யேந்திர ஜெயினுக்கு மசாஜ் செய்தவர் தனது மகளையே பலாத்காரம் செய்த குற்றவழக்கில் தண்டனை பெற்ற கைதி எனத் தகவல்கள் வெளியாகின. இந்த விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சி மற்றும் பாஜக இடையே கடும் வார்தைப் போர் உருவாகியது. இரு தரப்பும் கடுமையாக விமர்சித்தன.
ரோஜ்கர் மேளா! 71 ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி
டெல்லி நீதிமன்றத்தில் சத்யேந்திர ஜெயின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ராகுல் மெஹ்ரா “ கடந்த மே 31ம் தேதி கைது செய்யப்பட்டதில் இருந்து சிறையில் அமைச்சர் சத்தியேந்திர் ஜெயினுக்கு முறையான உணவுகள் வழங்கப்படவில்லை. கடந்த 12 நாட்களாக ஜெயின் மதரீதியாக சத்தியேந்திர ஜெயின் விரதம் இருந்து வருகிறார் அவருக்கு முறையான உணவுகள் வழங்கப்படவில்லை. மருத்துவப் பரிசோதனையும் நடக்கவில்லை. சிறை நிர்வாகத்தின் அலட்சியமான போக்கால் சத்தியேந்திர ஜெயின் உடல் எடை 28 கிலோ குறைந்துவிட்டது. சிறையில் சிறப்பு சலுகைகள் சத்தியேந்திர ஜெயினுக்கு வழங்கப்படுகிறது என்பது பொய்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திஹார் சிறையில் இருக்கும், சத்தியேந்திர ஜெயினுக்கு, பழங்கங்கள், பழ சாலட், உணவுகள், போன்றவை சாப்பிடத் தயாராக வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி காட்சிகள் புதிதாக வெளியாகியுள்ளன. இதனால், சத்தியேந்திர ஜெயின் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!
அது மட்டுமல்லாமல் சிறை வட்டாரங்கள் கூறுகையில் “ டெல்லி அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் உடல் எடை 28 கிலோ குறையவி்லலை. மாறாக 8 கிலோ எடை அதிகரித்துள்ளது”எனத் தெரிவித்துள்ளது.
