Asianet News TamilAsianet News Tamil

Gujarat Election 2022:சமாளிக்குமா பாஜக! தெற்கு குஜராத்தில் சவாலாகிய ஆம் ஆத்மி, பழங்குடியினர்: ஓர் அலசல்

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், தெற்குப்பகுதி மண்டலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியும், பழங்குடியினரும் கடும் சாவலாகஇருப்பார்கள் எனத் தெரிகிறது

A New Challenge For The BJP In Gujarat's South: AAP and Tribes
Author
First Published Nov 22, 2022, 2:08 PM IST

குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், தெற்குப்பகுதி மண்டலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சியும், பழங்குடியினரும் கடும் சாவலாகஇருப்பார்கள் எனத் தெரிகிறது

குஜராத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 1 மற்றும் 5ம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

இதில் முதல்கட்டமாக டிசம்பர்1ம்தேதி 89 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. இதில் 35 தொகுதிகள் தெற்கு குஜராத் மண்டலத்தில் வருகின்றன. பாருச், நர்மதா, தபி,தாங், சூரத், வால்சத், நவ்சரி ஆகிய மாவட்டங்கள் தெற்கு குஜராத் மண்டலத்தில் வருகின்றன

பாஜகவுக்கு தோல்வி பயம் ! குஜராத் தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர் கடத்தல்:சிசோடியா தாக்கு

A New Challenge For The BJP In Gujarat's South: AAP and Tribes

தெற்கு குஜராத்தில் உள்ள 35 தொகுதிகளில் 25 தொகுதிகளை கடந்த 2017ம் ஆண்டுதேர்தலில் பாஜக கைப்பற்றியது. காங்கிரஸ் 8 இடங்களையும் மற்றும் பாரதிய பழங்குடி கட்சி 2 இடங்களிலும் வென்றன.
இந்த 35 தொகுதிகளில் 14 தொகுதிகள் பழங்குடியினருக்கான ரிசர்வ் தொகுகியாகும். இந்த தொகுதியில் பாஜக கடந்த முறை 5 இடங்களில் வென்றது, காங்கிரஸ் கட்சி தாங், கப்ரதா தொகுதியில் வென்றது. 

ஆனால் பழங்குடியின மக்கள் அதிகமாக வசிக்கும் தொகுதிகள் அனைத்துமே பாஜகவுக்குப் பின்னடைவாகவே கருதப்படுகிறது. தெற்கு குஜராத்தில் உள்ள நகர்புற வாக்காளர்கள் மட்டுமே கடந்த 2017ம் ஆண்டு பாஜக வெற்றிக்கு பெரும்பான்மை காரணமாக இருந்தார்கள். 

இதில் சூரத் நகரம், கடந்த 2015ம் ஆண்டு பட்டிதார் இடஒதுக்கீட்டுக்காக ஹர்திக் படேல் நடத்திய போராட்டத்தால் மோசாகப் பாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய விவகாரத்தில் ஜவுளித் தொழில் செய்வோரும் அரசுக்கு எதிராக களமிறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு… 6 பேரின் விடுதலைக்கு எதிராக காங். மறுசீராய்வு மனு!!

A New Challenge For The BJP In Gujarat's South: AAP and Tribes

பாஜகவுக்கு எதிரான மனநிலை இருந்தபோதிலும்கூட அந்த நேரத்தில் 16இடங்களில் 15 தொகுதிகளில் வென்றது. குறிப்பாக பட்டிதார் சமூகத்தினர் அதிகம் இருக்கும் வரச்சா, கம்ரேஜ், கட்டார்கம் தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது.  ஆனால், பழங்குடியினர் ஆதிக்கம் இருக்கும் மண்ட்வி தொகுதியில் பாஜக தோல்வி அடைந்தது

இந்த முறை தேர்தல் கூடுதல் ஸ்வாரஸ்யத்தை அளித்ளளது. பாஜகவுக்கு தலைவலி தருவதற்கு பழங்குடியினர், காங்கிரஸ் தவிர்த்து ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு சூரத் நகர்புறத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வென்றதால் நம்பிக்கையுடன் தேர்தலைச் சந்திக்கிறது.

பட்டிதார் சமூகத்தினர் வாக்குகளை வெல்வதற்காக திட்டமிட்டு பட்டிதார் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. ஹர்திக் படேலுக்கு நெருக்குமாக இருந்த அல்பேஷ் கதாரியாவுக்கு வர்ச்சா தொகுதியை ஒதுக்கியுள்ளது ஆம் ஆத்மி கட்சி

பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் முன்னாள் தலைவர் தர்மிக் மாளவியாவை ஆல்பட் தொகுதியில் ஆம்ஆத்மி நிறுத்தியுள்ளது. பட்டிதார் சமூகத்தின் புகழ்பெற்ற தலைவரான ஆம்ஆத்மி மாநிலத் தலைவர் கோபால் இடாலியா, கடார்கிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். 

Gujarat Election 2022:நடைபயணம் மூலம் அதிகாரத்துக்கு வர துடிக்கிறார்கள்: ராகுல் மீது பிரதமர் மோடி தாக்கு

A New Challenge For The BJP In Gujarat's South: AAP and Tribes

ஆம்ஆத்மி மாநில துணைத் தலைவர் பீமாபாய் சவுத்ரி கூறுகையி்ல் “ இந்தத் தேர்தலில் பட்டிதார் சமூகத்தினர் நிச்சயம் வித்தியாசத்தை  ஆட்சியில் வழங்குவார்கள் என நம்புகிறேன். ஆம் ஆத்மிக்கு பட்டிதார்சமூகத்தினர் ஆதரவு அளிப்பார்கள். கடந்த தேர்தலில் கெஜ்ரிவால் பெரிதாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை, இந்த முறை தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் உள்ளார். எங்கள் தேர்தல் வெற்றியை டெல்லியிலும், பஞ்சாப்பிலும் மக்கள் பார்த்துள்ளதால், மக்கள் நிச்சயம் நல்ல முடிவை வழங்குவார்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்

 பழங்குடியினர் அதிகம் இருக்கும் 14 தொகுதிகளில் பாஜக 7 தொகுதிகளை கைவசம் வைத்துள்ளது. தாங், கப்ராடா, உமர்கம், தரம்பூர், காந்தேவி, மஹூவா, மங்ரோல் ஆகியவை அடங்கும்.

சமீபத்தில் நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக பழங்குடியின மக்களின் நிலம், வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியின எம்எல்ஏ ஆனந்த் படேல் போராட்டம் நடத்தினார். நர்மதா, பார், தபி ஆறு இணைக்கும் திட்டத்தில் கிடைக்கும் உபரி நீரை சவுராஷ்டிரா, கட்சி பகுதிக்கு திருப்பவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

ராகுல் காந்தி நடத்தும் பாரத் ஜோடோ நடைபயணம் 23ம் தேதி மத்தியப் பிரதேசத்தில் நுழைகிறது

A New Challenge For The BJP In Gujarat's South: AAP and Tribes

நர்மதா அணை கட்டும்போது ஏராளமான பழங்குடியின மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். இவர்களின் வாக்கு பாஜகவின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் துருப்புச்சீட்டாகஇருக்கிறது. பழங்குடியினர் வாக்குகள் இந்த முறை பாஜகவுக்கு கிடைக்காது என்று காங்கிரஸ் தீவிரமாக நம்புகிறது. 

ஆக, தெற்கு குஜராத்தில் பாஜகவுக்கு குடைச்சல் கொடுக்க ஆம்ஆத்மி, பழங்குடியினர், காங்கிரஸ் தயாராக உள்ளனர். இவர்களை சமாளித்து பாஜக வெல்லுமா என்பது வாக்கு எண்ணிக்கையின்போது தெரியவரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios