குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது அதனால்தான் சூரத் கிழக்குத் தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜக குண்டர்கள் கடத்தியுள்ளனர் என்று டெல்லி துணை முதல்வரும் ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா தாக்கியுள்ளார்.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தோற்றுவிடுவோம் என்று பாஜகவுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது அதனால்தான் சூரத் கிழக்குத் தொகுதி ஆம்ஆத்மி வேட்பாளரை பாஜக குண்டர்கள் கடத்தியுள்ளனர் என்று டெல்லி துணை முதல்வரும் ஆம்ஆத்மி மூத்த தலைவருமான மணிஷ் சிசோடியா தாக்கியுள்ளார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரைவத் தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. டிசம்பர் 1ம்தேதியும், 5ம் தேதியும் இரு கட்டங்களாகவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
WHO தலைமை அறிவியல் வல்லுநர் பொறுப்பில் இருந்து தமிழகத்தின் செளமியா சுவாமிநாதன் ராஜினாமா
20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்துவரும் பாஜக தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க போராடி வருகிறது. ஆனால், வழக்கமான அரசியல் எதிரியான காங்கிரஸ்கட்சியுடன், இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் சேர்ந்துள்ளது. இதனால் குஜராத் தேர்தலில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் சூரத் கிழக்குத் தொகுதியில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கஞ்சன் ஜாரிவாலாவை திடீரென பாஜக குண்டர்கள் கடத்திவிட்டனர். அவரை துப்பாக்கி முனையில் மிரட்டி தேர்தலில் இருந்து வாபஸ் பெற மிரட்டினர் என்று ஆம்ஆத்மி மூத்த தலைவர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
வ்வொரு மனிதர் வாழ்க்கையிலும் டிஜிட்டல் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ சூரத் கிழக்குத் தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலாவை பாஜக குண்டர்கள் நேற்று கடத்திவிட்டார்கள். இன்று 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் கஞ்சன் ஜாரிவாலா அழைத்துவரப்பட்டு தனது வேட்புமனுவை வாபஸ்பெற கட்டாயப்படுத்தப்பட்டார். தேர்தல் அலுவலகத்தில் ஜாரிவாலா அமரவைக்கப்பட்டு, வேட்பமனுவை திரும்பப்பெற போலீஸார் கட்டாயப்படுத்தியுள்ளனர்.
இது ஜனநாயகத்துக்கு வெளிப்படையான மிரட்டல் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கிறேன்.
எங்கள் வேட்பாளர் கடத்தப்பட்டு, துப்பாக்கி முனையில் மிரப்பட்டுள்ளார். இதைவிட மிகப்பெரிய அவசரநிலை தேர்தல் ஆணையத்துக்குவேறு என்ன வேண்டியதுள்ளது. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். குஜராத் தேர்தலில் தோல்வி அடைந்துவிடுவோம் என்று பாஜக அஞ்சுகிறது
அதனால்தான் ஆம் ஆத்மி வேட்பாளரை பாஜக குண்டர்கள் கடத்தினர். கஞ்சன் ஜாரிவாலாவும் அவரின் குடும்பத்தாரும் நேற்று மாலையிலிருந்து காணவில்லை. ஜாரிவாலாவின் வேட்புமனு பரிசீலனை முடிந்து தேர்தல் அலுவலகத்ததைவிடு அவர் வெளியேறியதும் பாஜக குண்டர்கள் அவரை கடத்திவிட்டனர் ” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
100 கோடி இளைஞர்கள் காது கேளாமல் போக ஆபத்து ! ஹெட்போன், இயர்பட் பயன்பாடு குறித்து எச்சரிக்கை
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனரான அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கிழக்கு சூரத் தொகுதியின் எங்கள் வேட்பாளர் கஞ்சன் ஜாரிவாலா, அவரின் குடும்பத்தார் நேற்றுமுதல் காணவில்லை. அவரின் வேட்புமனுவை நிராகரிக்க வைக்க பாஜக முயன்றது. ஆனால் அவரின் வேட்புமனு ஏற்கப்பட்டது. இதனால் அவரின் வேட்புமனுவை திரும்பப் பெறவைக்க அவரை கடத்தியுள்ளார்கள்?” எனத் தெரிவித்துள்ளார்
