Uddhav Thackeray: ஏற்றுக்கொள்ளுங்கள்| சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்த உத்தவ் தாக்கரேவுக்கு சரத் பவார் அறிவுரை
சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்தாலும் பெரிதாக பாதிப்பு ஏற்படாது, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சி, சின்னத்தை இழந்தாலும் பெரிதாக பாதிப்பு ஏற்படாது, தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உத்தவ் தாக்கரேவுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனியாகப் பிரிந்தார். இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக துணையுடன்,ஏக்நாத் ஷிண்டே முதல்வராகினார்.
பறிபோன சிவசேனா கட்சி| உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை
அதுமட்டுமல்லாமல் சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் தங்களுக்கே வழங்கக் கோரியும், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் தேர்தல்ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே முறையி்ட்டார். இதற்கு எதிராக உத்தவ் தாக்கரேயும் முறையிட்டு, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஷிண்டேவுக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவும், 13 மக்களவை எம்பிக்கள் ஆதரவும் இருந்தது. உத்தவ் தாக்கரேவுக்கு 15 எம்எல்ஏக்கள் ஆதரவும், 5 எம்பிக்கள் ஆதரவும் மட்டுமே இருந்தது. ஆதலால், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமைக்குத்தான் சொந்தம்” என்று அறிவித்தது.
இதையடுத்து, சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் இழந்து நிற்கும் உத்தவ் தாக்கரே இன்று நிர்வாகிகள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இந்நிலையில் மகாவிகாஸ் அகாதி கூட்டணியில் முக்கியக் கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், உத்தவ் தாக்கரேவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் எரிந்த நிலையில் ஜீப்பில் இரு சடலங்கள்: ராஜஸ்தான் முதல்வருக்கு விஎச்பி கண்டனம்
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியி்ல் கூறுகையில் “ தேர்தல்ஆணையத்தின் முடிவை உத்தவ் தாக்கரே ஏற்றுக்கொள்ள வேண்டும். சிவசேனா கட்சியும், சின்னமும் போய்விட்டதை நினைத்து கவலைப்படக்கூடாது. புதிய சின்னத்தை ஏற்க வேண்டும். சின்னம், கட்சி பெயர் பறிபோனது தேர்தலில் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது. மக்கள் புதிய சின்னத்தையும், பெயரையும் ஏற்றுக்கொள்வார்கள்.
இது தேர்தல் ஆணையத்தின் முடிவு, முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டால் அதற்கு மறுபரிசீலனை என்பது இல்லை. ஆதாலல், உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தின் முடிவை ஏற்க வேண்டும். அடுத்த 15 முதல் 30 நாட்களில் உரிய ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கலாம்.
சிவசேனாவை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே.. கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே - தேர்தல் ஆணையம் என்ன சொன்னது.?
இந்திரா காந்தியும் இதேபோன்ற சூழலைச் சந்தித்தார். காங்கிரஸ் கட்சிக்கு தொடக்கத்தில் இரு எருதுகள் சின்னம் இருந்தது. அதன்பின் கைச்சின்னம் கிடைத்து. அதுபோல் மக்கள் உத்தவ் தாக்கரேயின் புதிய சின்னத்தை ஏற்பார்கள். காங்கிரஸ் கட்சியின் புதிய சின்னத்தைஏற்றதுபோல் உத்தவ் தாக்கரே சின்னத்தையும் மக்கள் ஏற்பார்கள்.
இவ்வாறு சரத் பவார் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து உத்தவ் தாக்கரே குழுவினர் உச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாகத் தெரிவித்துள்ளனர். முன்னதாக சிவசேனா கட்சியும், சின்னமும் தங்களுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்தபின், ஏக்நாத் ஷிண்டே தரப்பினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர், இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.