ஹரியானாவில் எரிந்த நிலையில் ஜீப்பில் இரு சடலங்கள்: ராஜஸ்தான் முதல்வருக்கு விஎச்பி கண்டனம்
ஹரியானா மாநிலம் லோஹரு நகரில் ஜீப்பில் இரு சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதற்கு பஜ்ரங் தளம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் லோஹரு நகரில் ஜீப்பில் இரு சடலங்கள் எரிந்த நிலையில் காணப்பட்டதற்கு பஜ்ரங் தளம் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் லோஹரு நகரில் ஒரு ஜீப்பில் இரு மனித உடல்கள் எரிந்தநிலையில் இருந்தன. இவர்கள் இருவரும் முஸ்லிம்கள் என்றும், ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ராஜஸ்தானில் நசீர்(வயது25), ஜூனைத்(35) ஆகிய இருவர் கடத்தப்பட்டதாக அவர்களின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனால் ஜீப்பில் எரிந்தநிலையில் சடமலமாக இருப்பவர்கள் இவர்களா என்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள். இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
கேள்வியும் கேட்கல! வர்றதும் இல்லை! எம்பி-யானபின் மவுனமாகிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
இந்நிலையில் காணாமல் போன ஜூனைத், நசீர் இருவரின் உறவினர்களும் பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்த மோனு மனேசர், லோகேஷ் சிங்கலா, ரிங்கி சைனி, அனில், ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதையடுத்து, இவர்களை பிடித்துச் சென்று போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் இணைப் பொதுச்செயலாளர் டாக்டர் சுரேந்திர ஜெயின், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஹரியானா லோஹருவில் ஜீப்பில் எரிந்த நிலையில் இரு உடல்கள், எலும்புகள் கிடந்தன. இந்த வாகனத்தில் தீ தானாகப் பற்றியதா அல்லது யாரேனும் தீ வைத்தார்களா என இன்னும் முழுமையாக விசாரிக்கப்படவில்லை. இந்த வாகனம் ராஜஸ்தானைச் சேர்ந்தது என்றாலும், அதில் எரிந்தநிலையில் இருப்பவர்கள் உடல்கள் குறித்த டிஎன்ஏ பரிசோதனையும் விசாரணையும் நடக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது எங்களின் தெளிவானநிலைப்பாடு
ஆனால், ராஜஸ்தானின் பாரத்பூர் மாவட்டத்தில் இரு பசுக் கடத்தல்காரர்களைக் காணவில்லை. இவர்கள் மீது ஏராளமான வழக்குகள்நிலுவையில் உள்ளன. ஆனால், காணாமல் போன பசுக்கடத்தல் காரர்களில் ஒருவரின் சகோதரர், பஜ்ரங் தளம் அமைப்பைச் சேர்ந்தவர்களை சந்தேகிப்பதாக போலீஸிடம் புகார் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் காரியக் கமிட்டியில் சோனியா, ராகுல் காந்திக்கு நிரந்தர இடம்?
எந்தவிதமான விசாரணையும் நடத்தாமல், பசுக்கடத்தல்காரர் உறவினர் கூறியவர்கள் பெயரை போலீஸார் வழக்கில் சேர்த்துள்ளனர். இந்த வழக்கில்தேவையின்றி பஜ்ரங் தளம் நிர்வாகிகள் இழுக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் அரசின் பங்கு இதுபோன்ற வழக்குகளில், வாக்குவங்கியை பிரதானப்படுத்தியே இருக்கிறது. இதற்குமுன் பலவழக்குகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. இது அவர்களின் அரசியல் நிலைப்பாடு. பஜ்ரங் தளம் அமைப்பின் பெயர் இந்த விவகாரத்தில் சேர்க்கப்பட்டதை ஒருபோதும் சகிக்க முடியாது.
அரசியல் பாரபட்சத்துடன் நடக்கும் ராஜஸ்தான் அரசிடம் இருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது. ஆதலால், விஸ்வ ஹிந்து பரிஷத் முக்கிய கோரிக்கை வைக்கிறது.
- இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்
- விசாரணை முடியும்வரை யாரையும் கைது செய்யக்கூடாது
- விசாரணை முடிந்தபின் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
- பஜ்ரங் தளம் அமைப்பின் பெயரை தேவையில்லாமல் ராஜஸ்தான் அரசு இழுத்து பொய் குற்றம் சாட்டியதற்கு மன்னிப்புக் கோர வேண்டும்
இவ்வாறு சுரேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார்.