Ranjan Gogoi:கேள்வியும் கேட்கல! வர்றதும் இல்லை! எம்பி-யானபின் மவுனமாகிய முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் ஒரு கேள்விகூட இதுவரை கேட்டதில்லை எனத் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் ஒரு கேள்விகூட இதுவரை கேட்டதில்லை எனத் தெரியவந்துள்ளது.
மாநிலங்களவைக்கும் ரஞ்சன் கோகோய் வருகை 29 சதவீதமாகவே இருந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, நீதிபதிகளாக இருந்தவர்களுக்கு ஓய்வுக்குப்பின் மோடி அரசு பல்வேறு பதவிகளை வழங்கி வருகிறது. முன்னாள் நீதிபதிகள் அப்துல் நசீர் ஆந்திர ஆளுநராகவும், அசோக் பூஷன் தீர்ப்பாயத்தலைவராகவும் நியமிக்கப்பட்டனர். முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்பட்டது.
பிபிசி டெல்லி, மும்பை அலுவலகங்களில் 3வது நாளாக ஐடி சர்வே தொடர்கிறது
இந்த 3 நீதிபதிகளுமே ராமர் கோயில்நிலம் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மாநிலங்களவை எம்பியாக நியமிக்கப்பட்ட ரஞ்சன் கோகோய், எம்பியாக அவரின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்துள்ளது. எம்பியாக நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும் இதுவரை ரஞ்சன் கோகோய் ஒரு கேள்விகூட அவையில் எழுப்பவில்லை.
மாநிலங்களவை கூட்டம் நடக்கும்போது அவைக்கு முறையாக ரஞ்சன் கோகோய் வருவதில்லை, அவரின் சராசரி வருகையே 29 சதவீதம் மட்டும்தான். எம்பி.க்களின் சராசரி வருகை 79 சதவீதமாக இருக்கும்போது, ரஞ்சன் கோகோய் வருகை வெறும் 29 சதவீதம்தான்.
அதுமட்டுமல்லாமல் இதுவரை ரஞ்சன் கோகோய் மாநிலங்களவையில் எந்தவிதமான விவாதங்களிலும் பங்கேற்றது இல்லை. இதுவரை தனிநபர் மசோதா எதுவும் கொண்டுவந்ததும் இல்லை என்று நாடாளுமன்ற புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல், டீசல் மீதான வரி குறைகிறது? என்ன காரணம்? மத்திய அரசு பரிசீலனை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றபின் மாநிலங்களவை பதவி அளிக்கப்பட்டபோது ரஞ்சன் கோகோய் அளித்த பேட்டியில் “ மாநிலங்களவை எம்பி பதவி எனக்கு அளிக்கப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டதற்கு காரமம், தேசத்தின் வலிமைக்காக நாடாளுமன்றம், நீதிமன்றம் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான். நாடாளுமன்றத்தில் எனது வருகை, நீதிமன்றத்தின் உணர்வுகளை, எண்ணங்களை நான் பிரதிபலிக்க இதுவாய்ப்பாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
ஆனால், மாநிலங்களவைக்கு ரஞ்சன் கோகோய் 29 சதவீதம்தான் வருகை புரிந்துள்ளார்.