Shiv Sena:பறிபோன சிவசேனா கட்சி| உத்தவ் தாக்கரே நிர்வாகிகளுடன் இன்று அவசர ஆலோசனை
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமைதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமைதான் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
சிவசேனா கட்சி பறிபோனநிலையில், அடுத்து என்ன செய்வது, எதிர்கால நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகளுடன் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்த உள்ளார்.
சிவசேனாவை பறிகொடுத்த உத்தவ் தாக்கரே.. கொண்டாட்டத்தில் ஏக்நாத் ஷிண்டே - தேர்தல் ஆணையம் என்ன சொன்னது.?
இந்தக் கூட்டத்தில் உத்தவ் தாக்கரே, நிர்வாகிகள், துணைத் தலைவர்கள், எம்எல்ஏக்கள், செய்தித்தொடர்பாளர்கள் ஆகியோர் பாந்த்ராவில் உள்ள தாக்கரேயின் மாதோஸ்ரீ இல்லத்தில் இன்று பிற்பகல் ஆலோசனை நடத்த உள்ளனர்.
சிவசேனா கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனியாகப் பிரிந்தார். இதனால், மகாவிகாஸ் அகாதி கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதையடுத்து, பாஜக துணையுடன்,ஏக்நாத் ஷிண்டே முதல்வராகினார்.
அதுமட்டுமல்லாமல் சிவசேனா கட்சியையும், சின்னத்தையும் தங்களுக்கே வழங்கக் கோரியும், தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும் தேர்தல்ஆணையத்தில் ஏக்நாத் ஷிண்டே முறையி்ட்டார். இதற்கு எதிராக உத்தவ் தாக்கரேயும் முறையிட்டு, தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று தெரிவித்தனர்.
ஜார்ச் சோரஸ் பேச்சு இந்திய ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: ஸ்மிருதி இரானி கொந்தளிப்பு
இதையடுத்து, இந்த விவகாரத்தை தேர்தல் ஆணையத்தின் 3 பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. ஷிண்டேவுக்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவும், 13 மக்களவை எம்பிக்கள் ஆதரவும் இருந்தது. உத்தவ் தாக்கரேவுக்கு 15 எம்எல்ஏக்கள் ஆதரவும், 5 எம்பிக்கள் ஆதரவும் மட்டுமே இருந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், நேற்று முடிவை அறிவித்தது. அதில், “தேர்தல் ஆணையம் கூற்றுப்படி, “சிவசேனா கட்சி பெற்ற மொத்த வாக்குகளான 47,82,440 வாக்குகளில் 36,57,327 வாக்குகளை சேர்த்துள்ளது.
இது ஏறக்குறைய 76 சதவீதம், 55 சதவீத எம்எல்ஏக்கள் ஆதரவாக உள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமைக்கு 11,25,113 வாக்குகள் மட்டுமே உள்ளது, 15எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவாக உள்ளனர். ஆதலால், சிவசேனா கட்சியும், வில் அம்பு சின்னமும் ஏக்நாத் ஷிண்டே தலைமைக்குத்தான் சொந்தம்” என்று அறிவித்தது.
உண்மையான சிவசேனா கட்சியின் வாரிசான உத்தவ் தாக்கரேவுக்கு தேர்தல் ஆணையத்தின் முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. கடந்த 1966ம் ஆண்டு பாலசாஹேப் தாக்கரே கட்சியைத் தொடங்கியநிலையில் 57 ஆண்டுகளில் முதல்முறையாக கட்சியின் அதிகாரத்தை தாக்கரே குடும்பத்தினர் இழந்துள்ளனர்.