இங்கிலாந்தின் முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தி பெங்களூருவில் தனது தந்தை நாராயண மூர்த்தி உடன் ஐஸ்கிரீம் சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தியின் மகள் தான் அக்‌ஷதா மூர்த்தி.. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை திருமணம் செய்த அவர் தற்போது இங்கிலாந்தின் முதல் பெண்மணியாக இருக்கிறார். மேலும் தொழிலதிபர், ஆடை வடிவமைப்பாளர் என பன்முகங்களை கொண்டவர்.

கர்நாடகாவின் ஹுப்ளியில் பிறந்த அக்‌ஷதா, பெங்களூருவில் பள்ளிப்படிப்பை முடித்தார். கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டிலும் இரண்டு மேஜர்களை முடித்துள்ளார்.

பின்னர் அவர் லாஸ் ஏஞ்சல்ஸின் ஃபேஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் அண்ட் மெர்ச்சண்டைசிங்கில் பேஷன் டிசைனிங் பட்டம் பெற்றார். பிசினஸ் மேனேஜ்மென்ட் படித்துக் கொண்டிருந்த ஸ்டான்போர்டில் அக்‌ஷதா ரிஷி சுனக்கை சந்தித்தார். ரிஷி சுனக் - அக்‌ஷதா இருவரும் 2009-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட னர். இந்த தம்பதிக்கு கிருஷ்ணா மற்றும் அனுஷ்கா என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். 

பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக இன்று ஐக்கிய அமீரகம் செல்கிறார்!

இந்த நிலையில் இங்கிலாந்தின் முதல் பெண்மணி அக்ஷதா மூர்த்தி இந்தியா வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார். அந்த வகையில் தனது தந்தையும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான என்.ஆர்.நாராயண மூர்த்தியுடன் பெங்களூருவில் உள்ள பிரபலமான ஐஸ்கிரீம் கடைக்கு சென்றுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆதர்ஷ் ஹெக்டே என்ற பயனர் X வலைதள பக்கத்தில் இந்த படத்தை பகிர்ந்துள்ளார். பெங்களூரு ஜெயநகரில் அமைந்துள்ள கார்னர் ஹவுஸில் தனது தந்தை நாராயண மூர்த்தி உடன் அக்‌ஷதா ஐஸ்கிரீம் சாப்பிடுவதை அந்த புகைப்படத்தில் பார்க்க முடிகிறது.தந்தை-மகள் இருவரும் தங்கள் கைகளில் ஐஸ்கிரீம் கப்களுடன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்.

Scroll to load tweet…

இதனிடையே பிப்ரவரி 10 அன்று, சித்ரா பானர்ஜி திவாகருணியின் An Uncommon Love: The Early Life of Sudha and Narayana Murthy." என்ற புத்தக வெளியீட்டு விழாவில் நாராயண மூர்த்தி, அவரின் மனைவி சுதா மூர்த்தி, மகன் ரோஹன் மூர்த்தி அக்ஷதா தனது மகள்கள் அனுஷ்கா மற்றும் கிருஷ்ணாவுடன் கலந்து கொண்டார்.

செயின்ட் ஜோசப் வணிகவியல் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், தாங்கள் முதல் முறையாக சந்தித்ததைப் பற்றி சுதா மூர்த்தி பேசினார். 

டெய்ரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் இருந்த புழு!

திவாகருணியின் புத்தகம் நாராயண மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்வதற்கு முன்பு இருந்த உறவை பற்றி பேசுகிறது.. நாராயண மூர்த்தி - சுதா மூர்த்தி ஜோடி 1978 இல் திருமணம் செய்வதற்கு முன்பு நான்கு ஆண்டுகள் காதலித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.