பூவால் பலியான கேரள இளம்பெண்! மொபைலில் பேசிக்கொண்டிருந்த போது நடந்த விபரீதம்!

கேரளாவில் அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழ்ந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அக்கம்பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Mysterious death of Haripad woman leaves family in confusion sgb

இங்கிலாந்தில் வேலை கிடைத்து அங்கு செல்ல இருந்த கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியரான சூர்யா சுரேந்திரனின் துரதிர்ஷ்டவசமாக உயிரிழிந்திருக்கிறார்.

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா சுரேந்திரன். இவர் இங்கிலாந்துக்கு புறப்படுவதற்கு முன் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள அண்டை வீட்டாரிடம் விடைபெறச் சென்றுள்ளார். திரும்பி வரும்போது தொலைபேசியில் பேசியபடி, தன்னை அறியாமலே ஒரு அரளி இலையையும், ஒரு அரளிப் பூவையும் பிய்த்துத் தின்றுவிட்டார்.

பின்னர், இங்கிலாந்து செல்வதற்காக நெடும்பசேரியில் உள்ள விமான நிலையத்திற்குச் சென்ற சூர்யா, ஆலப்புழாவை அடைந்ததும் வாந்தி எடுத்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் சூர்யா உட்கொண்ட பூவையும் இலையையும் துப்ப வைக்க முயன்றனர். பிறகு உடல்நிலை சற்று சீரானதும் அவர் வீடு திரும்பினார்.

புதிய மண் பானையை பயன்படுத்துவதற்கு முன் இதை எல்லாம் செய்ய வேண்டும்!

Mysterious death of Haripad woman leaves family in confusion sgb

ஆனால், சூர்யாவின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது. இதனால் பருமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அரளி விஷம் அவரது இதயத்தை பாதித்து உயிரை பறித்தது தெரியவந்துள்ளது.

அரளிப்பூவை உண்டதால் இளம்பெண் உயிரிழ்ந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அக்கம்பக்கத்தினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அரளிப்பூ இதயம் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். அரளியை  சிறிதளவு உட்கொண்டாலும் ஆரோக்கியமான நபருக்குக் கூட ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஒரே படத்துல நடிச்ச ஹீரோவிடம் இத்தனை காரா! கார் கலெக்‌ஷன் லிஸ்ட் போட்டு காட்டிய மாதம்பட்டி ரங்கராஜ்!

விண்வெளி மர்மம்! 140 மில்லியன் மைல் தொலைவில் இருந்து பூமிக்கு வந்த லேசர் செய்தி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios