உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பெண் ஒருவர் 3 இளைர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார்.  வீட்டில் இருந்த அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காட்டிற்குள் 2 இளைஞர்கள் இழுத்து செல்ல அதனை ஒரு இளைஞர் படம் பிடித்துள்ளார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக கங்காகத் போலீஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த வீடியோவில் இருக்கும் நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். பெண்களுக்கு எதிரான குற்றங்கள்  உத்தரபிரதேசத்தில் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பிஜேபி ஆட்சி நடைபெற்று வருகிறது.  அவர் முதல்வராக பதவியேற்ற பிறகு பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருவது குறிப்பிடத்தக்கது.