மேகாலயாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

மேகாலயா மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதாவது மேகாலயாவின் தாஷ்காய் என்ற பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ளது. இங்கு வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்து ஏற்பட்டத்தில் நிலக்கரி சுரங்கத்தின் உள்ளே இருந்த 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து; 10 தொழிலாளர்கள் பலி

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆரம்பகட்ட தகவல்களின்படி, நிலக்கரிச் சுரங்கத்திற்குள் இந்த வெடிவிபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்த தொழிலாளர்கள் வெடி விபத்து நிகழ்ந்தவுடன் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் மேகாலயா காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

முதற்கட்ட தகவல்களின்படி, உயிரிழந்தவர்களில் ஒருவர் கதிகோரா பகுதியில் உள்ள பிஹாரா கிராமத்தைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கத்தில் எத்தனை பேர் இருந்தனர்? எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர்? என்பது உறுதியாக தெரியவில்லை. மீட்பு பணிகள் முழுமையாக முடிவடைந்த உடன் தான் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.