MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மும்பையில் இரு விமானங்கள் உரசி விபத்து.. பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?

மும்பையில் இரு விமானங்கள் உரசி விபத்து.. பரபரப்பு.. பயணிகள் நிலை என்ன?

கோவைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானமும் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக் கொண்டன. 

1 Min read
Author : Rayar r
Published : Feb 03 2026, 10:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
மும்பையில் இரு விமானங்கள் உரசி விபத்து
Image Credit : x

மும்பையில் இரு விமானங்கள் உரசி விபத்து

மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்ரவரி 3) இரண்டு விமானங்கள் உரசிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோவைக்கு புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமானமும், ஹைதராபாத்தில் இருந்து வந்து தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானமும் ஒன்றுடன் ஒன்று லேசாக மோதிக் கொண்டன. இரு விமானங்களின் இறக்கைகளும் உரசியதாக கூறப்படுகிறது.

என்ன நடந்தது?

அதாவது ஏர் இந்தியா விமானம் புறப்படுவதற்காக பின்னோக்கி நகர்த்தப்பட்டபோது ஹைதராபாத்தில் இருந்து தரையிறங்கி டாக்ஸிவேயில் வந்துகொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் இறக்கையுடன் உரசியது. இதனால் இரு விமானத்திலும் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். விபத்து ஏற்பட்டவுடன் இரண்டு விமானங்களிலும் இருந்த பயணிகள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். நல்ல வேளையாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

பயணிகள் நிலை என்ன?

இந்த சம்பவம் குறித்து விளக்கம அளித்த ஏர் இந்தியா, ''எங்கள் விமானத்தின் இறக்கை முனை சேதமடைந்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானம் தரைையிறக்கப்பட்டு தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்'' என்று கூறப்பட்டுள்ளது. 

இண்டிகோ விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ''ஹைதராபாத்தில் இருந்து வந்த விமானம் தரைப்பகுதியில் நகர்ந்து சென்றபோது மற்றொரு விமானத்துடன் மோதியது. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து விமான போக்குவரத்து துறை ஆனையம் விசாரணை நடத்தி வருகிறது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
மும்பை
ஏர் இந்தியா

Latest Videos
Recommended Stories
Recommended image1
முஸ்லிம்கள் பீப் சாப்பிட கூடாது.. பசுவை தேசிய விலங்காக அறிவிக்கணும்.. அதிரடி கிளப்பும் இஸ்லாமிய கட்சி!
Recommended image2
காதல் கணவரை கொலை செய்து நாடகமாடிய ஜோதி! விசாரணையில் குடும்பத்துடன் சேர்ந்து கொன்றது அம்பலம்! என்ன காரணம்?
Recommended image3
மாணிக்கம் தாகூர் உள்பட 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. அமளி துமளியான நாடாளுமன்றம்.. பரபரப்பு!
Related Stories
Recommended image1
அஜித் பவார் விமான விபத்துக்கு இதுதான் காரணம்.. வெளியான அதிச்ச்சி தகவல்!
Recommended image2
ஏர் இந்தியா விமான விபத்து: விமானியை யாரும் குற்றம் சொல்ல முடியாது! உச்சநீதிமன்றம் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved