MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Business
  • Cashew Prices : ஒரு கிலோ முந்திரி வெறும் ₹300-400-க்கு வேணுமா? இந்த இடத்துக்கு போனா வாங்கலாம்!

Cashew Prices : ஒரு கிலோ முந்திரி வெறும் ₹300-400-க்கு வேணுமா? இந்த இடத்துக்கு போனா வாங்கலாம்!

Cashew Prices : தற்போது ஒரு கிலோ முந்திரி ரூ.800-1000 வரை விற்கப்படுகிறது. இருப்பினும், சில இடங்களில் ஒரு கிலோ முந்திரியை ரூ.300-400 க்கும் கூட பெற முடியும். இவ்வளவு குறைந்த விலையில் முந்திரி எங்கே கிடைக்கிறது தெரியுமா?

2 Min read
Author : Arun Mozhi Varman
Published : Jul 28 2026, 01:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
எங்கு வாங்கலாம்?
Image Credit : Chatgpt

எங்கு வாங்கலாம்?

முந்திரிப்பருப்பு என்றாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். பாயசம், இனிப்புகள், பல்வேறு உணவுகளில் சுவையை அதிகரிக்க அல்லது தினசரி ஆரோக்கியத்திற்கு முந்திரிப்பருப்பு மிகவும் நல்லது. ஆனால் சாதாரண சில்லறை சந்தையில் ஒரு கிலோ முந்திரி ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகிறது. சாலையோர சிறிய வேன்கள் மற்றும் ஆட்டோக்களிலும் ரூ.500-600 கிலோ முந்திரி என்று பலகை மாட்டி விற்பதை நாம் பார்க்கிறோம். இது அந்த அளவுக்கு தரமானதாக இருக்காது. இருப்பினும், சில இடங்களில் சந்தையை விட மிகக் குறைந்த விலையில், ஏன் சாலையோரங்களை விடக் குறைந்த விலையிலேயே முந்திரிப்பருப்பை வாங்கலாம். அதுவும் மிக உயர்ந்த தரமானவை. இத்தகைய மொத்த விலையில் தரமான முந்திரிப்பருப்பை எங்கு வாங்கலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

இதையும் படிங்க : Copper Bottle : காப்பர் பாட்டிலில் தினமும் தண்ணீர் குடிப்பது உண்மையில் நல்லதா? யாரெல்லாம் இதைத் தவிர்க்க வேண்டும்?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
1.பலாசா (ஸ்ரீகாகுளம்)
Image Credit : Gemini AI

1.பலாசா (ஸ்ரீகாகுளம்)

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பலாசா - காசிபுக்கா பகுதிதான் முந்திரிக்கு மிகவும் பிரபலம். நூற்றுக்கணக்கான முந்திரி பதப்படுத்தும் யூனிட்கள் இங்கே இருக்கின்றன. அதனால், ஃபேக்டரி விலையிலேயே நேரடியாக முந்திரியை வாங்கலாம். வெளி மார்க்கெட்டில் ₹800-₹1000 விற்கும் முந்திரி, இங்கே தரத்தைப் பொறுத்து ₹400 முதல் ₹600-க்குள்ளேயே கிடைத்துவிடும்.

இதையும் படிங்க : Drishti Dosha : கண் திருஷ்டியால் அதிகம் பாதிக்கப்படும் 5 ராசிகள்! கவனமா இருங்க!

Related Articles

Related image1
House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!
Related image2
Indian Currency : கிழியாது, நனையாது, கசங்காது...அடுத்த வருஷம் நம்ம கையில பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு!
36
2.ஜங்காரெட்டிகூடம் (மேற்கு கோதாவரி)
Image Credit : Getty

2.ஜங்காரெட்டிகூடம் (மேற்கு கோதாவரி)

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்காரெட்டிகூடம் பகுதியிலும் தரமான முந்திரி கிடைக்கிறது. இந்தப் பகுதியைச் சுற்றி நிறைய முந்திரித் தோட்டங்கள் இருப்பதால், இங்கேயே முந்திரியைப் பதப்படுத்தி விற்கிறார்கள். இதனால், இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் முந்திரி கிடைக்கிறது.

இதையும் படிங்க : Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?

46
3.மோரி (கோனசீமா)
Image Credit : Getty

3.மோரி (கோனசீமா)

கோனசீமா மாவட்டத்தில் உள்ள மோரி கிராமத்து முந்திரிக்கு ஒரு தனி ஸ்பெஷாலிட்டி உண்டு. இங்கே மெஷின்களைப் பயன்படுத்தாமல், பாரம்பரிய முறையில் நெருப்பில் முந்திரியைச் சுட்டு, பருப்பை எடுக்கிறார்கள். இப்படி வறுத்து எடுப்பதால், இந்த நாட்டு முந்திரிக்கு ஒரு தனி மணமும், அருமையான சுவையும் இருக்கும். இந்த முந்திரியை மோரி கிராமத்திலேயே நல்ல விலைக்கு வாங்கலாம்.

இதையும் படிங்க : Jnana Siddhi Yoga : அள்ளிக்கொடுக்கும் கேது! ஞான சித்தி யோகத்தால் டக்குனு டாப்புக்கு போகும் 5 ராசிகள்!

56
முந்திரி விலையில் இவ்வளவு வித்தியாசமா!
Image Credit : Gemini AI

முந்திரி விலையில் இவ்வளவு வித்தியாசமா!

பலாசாவில் முந்திரி எவ்வளவு மலிவாகக் கிடைக்கிறது என்று பாருங்கள். முழு பருப்பு (Best Grade) வெளி மார்க்கெட்டில் ₹800-₹1000, பலாசாவில் ₹400-₹600. உடைந்த பருப்பு (Splits) வெளியே ₹700-₹800, பலாசாவில் ₹450-₹500. குருணை (Pieces) வெளியே ₹600-₹700, பலாசாவில் ₹300-₹400. கிலோவுக்கு பாதிக்குப் பாதி விலை குறைகிறது.

இதையும் படிங்க : House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!

66
ரூ.30க்கு ஒரு கிலோ முந்திரியா...உண்மையா?
Image Credit : Chat gpt

ரூ.30க்கு ஒரு கிலோ முந்திரியா...உண்மையா?

சோஷியல் மீடியாவில் 'கிலோ ₹30-க்கு முந்திரி' என வரும் வீடியோக்களை நம்ப வேண்டாம். அது ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்தாரா மாவட்டத்தில் உள்ள 'நாலா' கிராமத்தில் விற்கப்படும் பதப்படுத்தப்படாத பச்சை முந்திரி (Raw Cashew Nuts). அதன் தோலில் விஷத்தன்மை கொண்ட எண்ணெய் இருக்கும். அதைச் சாப்பிட முடியாது. சாப்பிடக்கூடிய தரமான முந்திரி ₹30-க்கு எங்குமே கிடைக்காது. அது வெறும் வதந்திதான்.

இதையும் படிங்க : Gas Cylinder : கேஸ் சிலிண்டர் தீரப்போகிறதா? இந்த அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

About the Author

AM
Arun Mozhi Varman
Bio : அருண் மொழி வர்மன் மீடியா துறையில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். மக்கள் தொலைக்காட்சி, ஒன் இந்தியா, கிளான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ள இவர், பல்வேறு தளங்களில் செய்தி, கட்டுரை மற்றும் சிறப்புப் பதிவுகளை வெளியிட்டுள்ளார். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் துணை ஆசிரியராக பணி புரியும் இவர் அரசியல், சமூக நிகழ்வுகள், வரலாறு, கலாச்சாரம் மற்றும் சினிமா உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
வணிகம்
இந்தியா
Latest Videos
Recommended Stories
Recommended image1
சென்னைவாசிகளுக்கு ஜாக்பாட்! ஐடி டூ EV.. இந்த 5 துறைகளில் 11.5% சம்பள உயர்வு.. முழு லிஸ்ட்!
Recommended image2
Best Time to Visit DMart: இந்த நேரத்தில் கூட்டமும் குறைவு, சலுகைகளும் அதிகம்.. 99% பேருக்கு தெரியாத டிமார்ட் ரகசியம்!
Recommended image3
Investment: உங்கள் குழந்தைகளை லட்சாதிபதியாக்கும் PPF கணக்கு.! லட்சங்களாக மாறும் சில ஆயிரங்கள்.! எப்படி தெரியுமா?
Related Stories
Recommended image1
House Construction : 900 சதுர அடியில் வீடு கட்ட எவ்வளவு செலவாகும்? முழு பட்ஜெட் பிளான் இதோ!
Recommended image2
Indian Currency : கிழியாது, நனையாது, கசங்காது...அடுத்த வருஷம் நம்ம கையில பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved