நிலக்கரி சுரங்கத்தில் விபத்து... 21 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 66 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 66 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் ஷான்ஜி மாகாணம், ஷென்மு நகரில் உள்ள லிஜியாகவ் என்ற நிலக்கரி சுரங்கத்தில் நேற்று 87 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அப்போது சுரங்கத்தில் மேற்பகுதி திடீரென சரிந்து அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 21 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதையடுத்து மீட்புக்குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக 66 பேரை பத்திரமாக மீட்டனர். இடிபாடுகளில் சிக்கிய 2 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. சீனாவில் இதுபோல நிலக்கரி சுரங்க விபத்துக்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.