Mangaluru cooker blast: குக்கர் வெடிகுண்டு வழக்கு: கர்நாடகாவில் அமலாக்கத்துறை தேடுதல் வேட்டை

கர்நாடக மாநிலம் மங்களுரில் நிகழ்ந்த குக்கர் குண்டு வெடிப்பு தொடர்பாக அமலாக்கத்துறை அந்த மாநிலத்தில் இன்று தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

Mangaluru cooker blast: ED conducts search in Karnataka

கர்நாடக மாநிலம் மங்களூரின் பல்வேறு பகுதிகளில் இன்று அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய பண மோசடி வழக்குகள் குறித்து அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்துகிறார்கள்.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்த முகமது ஷாரிக், மற்றும் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

இதுபற்றிய விசாரணையில் முகமது ஷாரிக் என்பவர் குண்டு வெடிப்பு சதித் திட்டத்துடன் ஆட்டோவில் சென்றார் என்றும் அவர் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர் என்றும் தெரியவந்தது.

ரூ.133 கோடி அபராதமா? கூகிள் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios