ரூ.133 கோடி அபராதமா? கூகிள் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
ஆரோக்கியமான வணிகப் போட்டிக்கு எதிராக செயல்படுவதாக கூகுள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு மொபைல் போன்களில் கூகுள் குரோம், யூடியூப் போன்ற தனக்குச் சொந்தமான செயலிகளை முன்கூட்டியே நிறுவி வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறது. இதனால், பிற போட்டியாளர்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், கூகுள் நிறுவனத்துக்கு ரூ.1337.76 கோடி அபாரதம் விதிக்கப்பட்டது.
இந்தியப் போட்டிகளுக்கான ஆணையமான சிசிஐ என்ற அமைப்பு விதித்த இந்த அபராதத்தை எதிர்த்து கூகுள் நிறுவனம் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. அப்போது சிசிஐ விதித்த அபராதத் தொகையில் 10 சதவீதத்தை மட்டும் கூகுள் நிறுவனம் செலுத்தவேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இதனை ஏற்க மறுக்கும் கூகுள் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் கூகுள் நிறுவனத்தின் மனுவை ஜனவரி 16ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறது.