இந்தியர்களின் தரமான பதிலடி.. “நீங்களாவது நிறைய பேரை அனுப்புங்க..” சீனாவிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை..

மாலத்தீவு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Maldives Lakshadweep Row President  Mohamed Muizzu urges China to send more tourists after backlash from Indians Rya

இந்தியாவுடன் மோதல் போக்கு தொடங்கி உள்ள நிலையில், மாலத்தீவு அதிக சுற்றுலாப் பயணிகளை அனுப்ப வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு சீனாவின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கான முயற்சிகளை சீனா தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் 5 நாள் அரச முறை பயணமாக சீனா சென்றுள்ளார். புஜியான் மாகாணத்தில் மாலைதீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர் சீனா மாலத்தீவின் நெருங்கிய நட்பு நாடு என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் “ சீனா எங்களின் நெருங்கிய நட்பு நாடாக உள்ளது. வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் கூட்டாளார்களாக நாங்கள் உள்ளோம்.. ஒன்றாக உள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை சீனா எங்கள் (மாலத்தீவுகளின்) சந்தையில் முதலிடத்தில் இருந்தது, மேலும் இந்த நிலையை சீனா மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை நாங்கள் தீவிரப்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எனவே சீனா எங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலா பயணிகளை அனுப்ப வேண்டும்" என்று தெரிவித்தார்.

லட்சத்தீவை காப்பாற்றிய முதலியார் சகோதரர்கள்; யார் இவர்கள்? வல்லபாய் பட்டேல் பின்னணியில் நடந்தது என்ன?

மேலும் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி (பிஆர்ஐ) திட்டத்தையும் பாராட்டிய முகமது முய்ஸூ, அந்த திட்டத்தில்  சேர விருப்பம் தெரிவித்தார். இந்தியப் பெருங்கடல் தீவில் ஒருங்கிணைந்த சுற்றுலா மண்டலத்தை உருவாக்க 50 மில்லியன் அமெரிக்க டாலர் திட்டத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

இந்தியா - மாலத்தீவு இடையே என்ன பிரச்சனை?

பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவின் சில அமைச்சர்கள் அவதூறு கருத்துகள் தெரிவித்ததை தொடர்ந்து இந்தியா - மாலத்தீவு இடையே மோதல் வெடித்துள்ளது. மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த 3 அமைச்சர்களை மாலத்தீவு அரசாங்கம் சஸ்பெண்ட் செய்தது. இருப்பினும், மாலத்தீவு கருத்துக்கள் இந்தியர்களை கோபப்படுத்தியது. ட்விட்டரில் #BoycottMaldives என்ற ஹேஷ்டாக ட்ரெண்டானது. இதனால் பலரும் தங்கள் மாலத்தீவு பயணத்தை ரத்து செய்ய தொடங்கினர். ஆன்லைன் பயண நிறுவனமான EaseMyTrip, மாலத்தீவுகளுக்கான விமானங்களையும் சஸ்பெண்ட் செய்தது..

இந்தியா மாலத்தீவு : லட்சத்தீவில் பிரதமர் மோடி; வைரலான புகைப்படங்கள்; மாலத்தீவு அலறியது ஏன்?

முன்னதாக மாலத்தீவு சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் நாட்டிற்கான மிகப்பெரிய சுற்றுலா சந்தையாக இந்தியா உள்ளது. 2023-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையிலான சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றனர். 209,198 பயணிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 209,146 பயணிகளுடன் ரஷ்யா 2வது இடத்தில் உள்ளது. 187,118 பயணிகளுடன் சீனா 3வது இடத்தில் உள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios