Asianet News TamilAsianet News Tamil

மோடி மீண்டும் பிரதமராவதை 469 ஆண்டுகளுக்கு முன்பே கணித்த நாஸ்ட்ராடாமஸ்.. ஆனா ஒரு ட்விஸ்ட்..

2024 மக்களவை தேர்தல் குறித்து பல நிபுணர்கள் கணித்திருந்தாலும், பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து என்ன கணித்திருந்தார் தெரியுமா?

Lok Sabha Elections 2024 Result Did Nostradamus predict another modi term but there is a twist Rya
Author
First Published Jun 5, 2024, 11:18 AM IST | Last Updated Jun 5, 2024, 11:18 AM IST

நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, ​​பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 291 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதில் பாஜக மட்டும் தனித்து 239 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 

மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி துணையுடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-ம் ஆண்டிலும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது.

2024 மக்களவை தேர்தல் குறித்து பல நிபுணர்கள் கணித்திருந்தாலும், பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ராடாமஸ் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வருவது குறித்து என்ன கணித்திருந்தார் தெரியுமா? இதுகுறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

3வது முறை வெற்றி வாகை சூடிய மோடி! உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து! காத்திருக்கும் அமெரிக்கா!

நாஸ்ட்ராடாமஸ் என்ன கணித்தார்?

நரேந்திர மோடியின் எழுச்சியை 469 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது 1555ல் பிரெஞ்சு ஜோதிடர் நோஸ்ட்ராடாமஸ் கணித்ததாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.. மேலும் அவரின் பதிவில்  "2014 முதல் 2026 வரை, ஒரு நபர் இந்தியாவை வழிநடத்துவார் என்று பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். முதலில், மக்கள் வெறுப்பார்கள் ஆனால் அதன் பிறகு மக்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள், அவர் நாட்டின் அவலத்தையும் திசையையும் மாற்றுவார்.

ஒரு நடுத்தர வயது சுப்பர்பவர் கொண்ட நிர்வாகி இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் பொற்காலத்தை கொண்டு வருவார். அவரது தலைமையில் இந்தியா உலகளாவிய மாஸ்டர் ஆக மட்டுமல்ல, பல நாடுகளும் இந்தியாவின் ஆதரவின் கீழ் வரும். 

2014 முதல் இந்துக்கள் ஆட்சி செய்வார்கள். ஆசியாவில் அவர்களை எதிர்க்க யாரும் இருக்க மாட்டார்கள். இந்தியாவின் பிரதமர் குஜராத்தை சேர்ந்தவராக இருப்பார். அவரின் தந்தை கடையில் டீ விற்பவராக இருப்பார். அவரின் முதல் பெயர் நரேந்திர” என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளதாக கிரண் ரிஜுஜு குறிப்பிட்டுள்ளார்.

நல்லவேள.. பாஜக இந்த 2 முக்கிய முடிவுகளை மட்டும் எடுக்கலன்னா.. ஆட்சியே போயிருக்கும்..

நாஸ்ட்ராமஸின் கணிப்பில் மற்றொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்க வேண்டி உள்ளது. அதாவது புதிய அரசின் பதவிக்காலம்  2024 - 2029 வரை இருக்கும் நிலையில் அவர் 2026 வரை தான் பிரதமர் மோடி பிரதமராக இருப்பார் என்று கணித்துள்ளார். இதனால் தற்போது மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைந்தால் கூட அது 2026 வரை தான் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில் மத்தியில் ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்களில் எந்த கட்சியும் வெற்ற பெறாததால் கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி உதவி உடன் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. 2014, 2019-ஐ தொடர்ந்து 2024-லும் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் அதே நேரம் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா கூட்டணி சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. 

அதே நேரம் தற்போது என்.டி.ஏ கூட்டணியில் உள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் பல நிபந்தனைகளை விதிப்பதாகவும் கூறப்படுகிறது. இதை எல்லாவற்றையும் கடந்து பாஜக கூட்டணி கட்சிகள் உதவியுடன் ஆட்சி அமைத்தால் கூட, நாஸ்ட்ராடமஸின் கணிப்பின் அந்த ஆட்சி 2026 வரை மட்டுமே நீடிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios