bumper lottery result: கேரள ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு: எவ்வளவு பணம் கைக்கு கிடைக்கும்?
கேரளாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. மலேசியா சென்று சமையல் கலைஞராக நினைத்தவருக்கு இந்த பரிசு கிடைத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு லாட்டரியில் ரூ.25 கோடி பரிசு கிடைத்துள்ளது. மலேசியா சென்று சமையல் கலைஞராக நினைத்தவருக்கு இந்த பரிசு கிடைத்து அவரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மலேசியா செல்வதற்காக வங்கியில் ரூ.3 லட்சம் கடன் பெற்ற மறுநாளே அதிர்ஷ்டம் அவரின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளது.திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்ட ஓட்டுநர் அனூப் என்பவருக்கு லாட்டரியில் இந்த பரிசு கிடைத்துள்ளது.
கேரள அரசின் லாட்டரி இயக்குநரகம் சார்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இதன்படி, இந்த ஆண்டு ரூ.25 கோடி பரிசுக்கான லாட்டரி குலுக்கல் நடந்தது. இதற்காக67.50 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன, இதில் 90ஆயிரம் லாட்டரி டிக்கெட்டுகளைத் தவிர அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. லாட்டரி டிக்கெட்டுகள் மூலம் அரசுக்கு ரூ. 330 கோடி வருமானம் கிடைத்தது.
இந்நிலையில் ஓணம் பண்டிகை லாட்டரி குலுக்கல் நிகழ்ச்சி நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. கேரள நிதி அமைச்சர் பாலகோபால் குலுக்கலைத் தொடங்கிவைத்தார். இதில் முதல்பரிசாக ரூ.25 கோடி டிஜே750605 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்தது.
இந்த லாட்டரி சீட்டுக்கு சொந்தக்காரர், திருவனந்புரம் ஸ்ரீவராகம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனூப் என்பது தெரியவந்தது. ரூ.25 கோடி பரிசு கிடைத்தது உறுதி செய்யப்பட்டவுடன் அனூப் உற்சாகமடைந்துள்ளார். லாட்டரியில் முதல்பரிசு கிடைத்தது குறித்து அனூப் கூறியதாவது:
நான் மலேசியா சென்று, சமையல் கலைஞராக வேலை செய்ய முடியு செய்தேன். இதற்காக வங்கியில் லோன் கேட்டு ரூ. 3 லட்சமும் கிடைத்துவிட்டது. ஆனால், இன்று(நேற்று) காலை தொலைக்காட்சியைப் பார்த்தபோது நான் வைத்திருந்த லாட்டரிக்குமுதல் பரிசு கிடைத்தாக அறிவித்தார்கள்.
இதைக் கேட்டதும் எனக்கு நம்பிக்கையில்லை. என்னுடைய லாட்டரி சீட்டை எடுத்து பரிசோதித்தபின்புதான் எனக்கு பரிசு கிடைத்தது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் என் செல்போனிலும் நான் வாங்கிய லாட்டரிக்கு பரிசு கிடைத்ததாக எஸ்எம்எஸ் வந்தது. அதன்பின்புதான் நம்பினேன். என்னால் நம்பமுடியவில்லை, உடனடியாக என் மனைவியிடம் கூறி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
கடந்த 22 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி வருகிறேன். இதுவரை எனக்கு ரூ.5 ஆயிரம் மட்டும்தான் அதிகபட்சமாக பரிசு கிடைத்திருந்தது. முதல்முறையாக ரூ.25 கோடி கிடைத்துள்ளது. எனக்கு வங்கியிலிருந்து தொலைப்பேசி அழைப்பில் லோன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், எனக்கு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ள செய்தியைக் கூறி எனக்கு லோன் தேவையில்லை எனத் தெரிவித்துவிட்டேன்
பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
என்னுடைய முதல் பணி சொந்தமாக வீடு கட்டுவது அதன்பின் எனக்கிருக்கும் சிறிய கடன்களை அடைப்பதாகும். அதன்பின் கேரளாவில் சிறிய அளவில்ஹோட்டல் நடத்தவும் திட்டமிட்டுள்ளேன்”எ னத் தெரிவித்தார்.
எவ்வளவு பணம் கிடைக்கும் ?
அனூப்புக்கு கிடைத்த ரூ.25 கோடி லாட்டரி பரிசில் 40 சதவீதம் வரியாக பிடிக்கப்பட்டு 60 சதவீதம் மட்டுமே அனுப்புக்கு கிடைக்கும். அதாவது, ரூ.15 கோடியே 75 லட்சம் அனூப்புக்குக் கிடைக்கும்.
கடந்த ஆண்டு ஓணம் லாட்டரி முதல் பரிசாக ரூ.12 கோடி கொச்சி அருகே மாராடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆர். ஜெயபாலனுக்கு கிடைத்தது. லாட்டரியில் பரிசு விழுந்து கோடீஸ்வரராகிய பின்பும் இன்னும் அவர் ஆட்டோவே ஓட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.