பாதயாத்திரையின் போது ராகுல்காந்தி செய்த காரியம்... இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றுக்கொண்டிருந்த போது செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

rahul gandhi helps girl to wear footwear and videos goes viral

ராகுல்காந்தி பாதயாத்திரை சென்றுக்கொண்டிருந்த போது செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 3,500 கி.மீ தூரத்துக்கு 150 நாட்கள் ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டுள்ளார். மொத்தம் 150 நாட்கள் நடைபெறும் இந்த பேரணி கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீரில் முடிவடையும்படி திட்டமிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய பாதயாத்திரையை முதல்வர் ஸ்டாலின் குமரியில் தொடங்கி வைத்தார். இந்த பாதயாத்திரை கேரளா மாநிலத்திற்குள் கடந்த 11 ஆம் தேதி நுழைந்தது. கேரளாவில் இன்று ராகுல்காந்தியின் 7 ஆவது நாள் பாதயாத்திரை ஆலப்புழா ஹரிப்பாடு பகுதியில் இருந்து தொடங்கியது.

இதையும் படிங்க: இந்திய விண்வெளி துறையில் ரூ.80,000 சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் தகுதி..? விண்ணப்பிப்பது எப்படி..? விவரம் இதோ

rahul gandhi helps girl to wear footwear and videos goes viral

இந்த யாத்திரை தொடங்கியது முதலே, காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் நல்ல எழுச்சி ஏற்பட்டு உள்ளதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். காங்கிரஸ் வலுவாக இருக்கும் மாநிலங்களில் ஒன்றாகக் கேரளா உள்ளது. இதனால் அங்குப் பல மாவட்டங்களில் தொடர்ந்து பாத யாத்திரை சென்று வருகிறார். 11 ஆவது நாளான இன்று ஆலப்புழா மாவட்டத்தில் ராகுல் காந்தி பாத யாத்திரை சென்றுள்ளார். அவருடன் பல காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நிர்வாகிகளும் நடைப்பயணம் சென்று கொண்டு இருந்தனர். அப்போது காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் தனது குழந்தையையும் பாத யாத்திரைக்கு அழைத்து வந்து இருந்தார்.

இதையும் படிங்க: 60 மாணவிகளின் குளியல் வீடியோஸ்.. லீக் செய்த சக மாணவி கைது - ஆபாச தளத்திற்கு விற்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம்

rahul gandhi helps girl to wear footwear and videos goes viral

ராகுல் காந்தி அருகே அவர்கள் பாத யாத்திரை சென்று கொண்டு இருந்தனர். அப்போது அந்த சிறுமி சரியாக நடக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்த ராகுல் காந்தி, அவரே அந்த சிறுமியின் காலணியைச் சரி செய்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவில் சிறுமி சரியாக நடக்க முடியாமல் அவதிப்படுவதைப் பார்த்த ராகுல் காந்தி, அவரது தந்தையிடம் அச்சிறுமி அணிந்திருந்த காலணியில் சரியாக இல்லை எனக் கூறுகிறார். பின்னர் துளியும் யோசிக்காமல் அவரே சிறுமியின் காலணியைச் சரி செய்கிறார். இது தொடர்பான படங்கள் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. நெட்டிசன்கள் பலரும் ராகுல் காந்தியின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios