மாணவிகளின் 60 குளியல் வீடியோக்கள் கசிந்தது.. அதிர்ச்சியில் தற்கொலைக்கு முயன்ற மாணவிகள் - பரபரப்பு சம்பவம்.!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள சண்டிகர் பல்கலைக்கழகத்தின் விடுதியில் சக தோழிகளின் அந்தரங்க வீடியோக்களை பெண் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கசியவிட்டதாகக் கூறப்பட்டதையடுத்து போராட்டங்கள் வலுத்து வருகின்றன.

Chandigarh University Viral Video MMS scandal in Chandigarh

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ளது சண்டிகர் பல்கலைக்கழகம். இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இங்கு சுமார் 60 மாணவிகளின்  வீடியோக்கள் இணையதளத்தில் வெளியானது. பல்கலைக்கழக விடுதி குளியல் அறையில், ரகசிய கேமரா வைத்து மாணவிகள் குளிப்பதை படம்பிடித்தது தெரியவந்தது.

Chandigarh University Viral Video MMS scandal in Chandigarh

மேலும் செய்திகளுக்கு..“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

இந்த வீடியோக்கள் வெளியான அடுத்து, சம்பந்தப்பட்ட மாணவிகள் 8 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும், 3 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

குற்றம்சாட்டப்பட்ட பெண் சட்டவிரோதமாக நிர்வாண படங்கள் மற்றும் வீடியோக்களை சிம்லாவில் உள்ள ஒரு ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். இதன் விளைவாக அந்த வீடியோக்கள் இணையத்தளத்தில் பரவியதாகக் கூறப்படுகிறது. பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் மூடிமறைப்பதாகப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

பாதிக்கப்பட்ட மாணவிகளில் 8 பேர் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியானது. ஆனால், அதை போலீசார் மற்றும் பல்கலைக்கழகம் தரப்பில் மறுத்தனர். மாணவர்கள் அமைதியாக இருக்குமாறு பஞ்சாப் கல்வி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு..நெட்டில் லீக்கான கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்கள்.. போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்.!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios