நெட்டில் லீக்கான கல்லூரி மாணவிகளின் குளியல் வீடியோக்கள்.. போராட்டத்தில் குதித்த ஹாஸ்டல் மாணவிகள்.!!

சண்டிகரில் தனியார் பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் மாணவிகள் விடுதி தனியாக இயங்கி வருகிறது.

Girls Hostel Videos Leaked Protest In Chandigarh University

இந்த பல்கலைகழகத்தில் பயிலும் மாணவிகள் ஏராளமானோர் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் கசிந்தது. சுமார் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோக்கள் இணையத்தில் திடீரென பரவியதால், மாணவிகள், மாணவிகளின் நண்பர்கள், பெற்றோர்கள், உறவினர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். 

Girls Hostel Videos Leaked Protest In Chandigarh University

இதனால் கோபமடைந்த மாணவிகள் நேற்று நள்ளிரவு பல்கலைகழக வளாகத்திற்கு வெளியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவிகளை சமாதானப்படுத்தினர்.

மேலும் செய்திகளுக்கு..“ஆத்திசூடி கேட்டா, சினிமா பாட்டை பாடுறான்..முருகனுக்கு தமிழ் மந்திரமே வேண்டாம்னு சொல்றாங்க” சீமான் அதிரடி.!

பல்கலைகழக விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரே சக மாணவிகள் குளியலறையில் குளிக்கும்போது ரகசியாக வீடியோவாக எடுத்துள்ளார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்துள்ளது. அவர் அந்த வீடியோக்களை வேறு ஒரு நபருக்கு அனுப்பியபோது அந்த நபர் அந்த வீடியோக்களை இணையத்தில் கசிய விட்டதும் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, மாணவிகள் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த மாணவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 8 மாணவிகள் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மாநில கல்வி அமைச்சர் ஹர்ஜோத் சிங், ‘ மாணவர்கள் அமைதி காக்க வேண்டும்.

Girls Hostel Videos Leaked Protest In Chandigarh University

மேலும் செய்திகளுக்கு..இனி தோசை சரியா வரலன்னு கவலைப்படாதீங்க மக்களே.! தோசை பிரிண்டர் வந்தாச்சு - விலை எவ்வளவு தெரியுமா ?

இந்த விவகராத்தில் உரிய நீதி வழங்கப்படும். ஊடகங்களும் இந்த விவகாரத்தில் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவிகளின் வீடியோக்களை இணையத்தில் பதிவேற்றம் செய்த முக்கிய குற்றவாளியான ஆண் நண்பரை கைது செய்ய பஞ்சாப் போலீசார் சிம்லா விரைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..“நள்ளிரவில் வேறொரு சிறைக்கு மாற்றப்பட்ட சவுக்கு சங்கர்”.. இதுதான் காரணமா ? வெளியான அதிர்ச்சி தகவல் !

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios