kcr:வகுப்புவாத சக்திகள் தெலங்கானாவையும், தேசத்தையும் பிளவுபடுத்த முயற்சி: தெலங்கானா முதல்வர் குற்றச்சாட்டு
மக்களிடையே வெறுப்பைப் பரப்பி வகுப்புவாத சக்திகள், தெலங்கானாவையும், தேசத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்தார்.
மக்களிடையே வெறுப்பைப் பரப்பி வகுப்புவாத சக்திகள், தெலங்கானாவையும், தேசத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன என்று தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் எச்சரிக்கை விடுத்தார்.
தெலங்கானா தேசிய ஒருங்கிணைந்தநாள் இன்று ஹைதராபாத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தேசியக் கொடியை முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் ஏற்றினார். அதன்பின் அவர் மக்களிடையே பேசியதாவது:
‘லட்சக்கணக்கான தாய்மார்கள் என்னை ஆசிர்வதித்தார்கள்’: பிரதமர் மோடி உருக்கம்
மதரீதியான வெறி வளர்ந்தால், தேசத்தின் வளர்ச்சியையும் அழித்துவிடும், மனிதர்களுக்கிடையிலான உறவையும் அழித்துவிடும். மதவெறி தொடர்ந்து அதிகரித்து வருவதை மக்கள் கவனிக்க வேண்டும்.
தங்களின் குறுகிய நலன்களை மக்கள் முன் மதவெறிபிடித்தவர்கள் விதைக்கிறார்கள். மக்களிடையே வெறுப்பையும், விஷமான கருத்துக்களையும் பரப்புகிறார்கள். மக்களிடையே இந்த பிளவை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
குறுகிய மற்றும் அரசியல் நலன்களை நிறைவேற்ற, தெலங்கானா தேசியஒருமைப்பாட்டு நாளான இன்று அழிக்கவும், சிதைக்கவும் முயல்கிறார்கள்.இந்த நாளுக்கும், இந்த அழிக்கும் சக்திக்கும் எந்தத் தொடர்பும் இ்லலை. தெலங்கானாவின் ஒளிமயமான வரலாற்றை களங்கப்படுத்தவே இந்த அற்ப அரசியலை நடத்துகிறார்கள்.
கேரளாவில் நிழற்குடை சர்ச்சை: மடியில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்: மேயர் ஆர்யா உறுதி
தெலங்கானா சமூகம் மிகவும் அறிவார்ந்த வழியில் பதில் அளித்துள்ளது. அதே அளவு எழுச்சி, புத்திசாலித்தனம் மீண்டும் எழும். தேசத்தின் கட்டமைப்பை துண்டிக்க நினைக்கும், கெட்ட மற்றும் ஊழல் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டும்.
கண் இமைக்க மறக்கும் நேரத்தில்கூட சமூகத்தை பெரும் கொந்தளிப்பில் தள்ளும் அபாயம் இருக்கிறது. 2014ம் ஆண்டில் தெலங்கானா உருவாகியபின், தொழில் துறை மற்றும் முதலீடாக ரூ.2.32 லட்சம் கோடி வந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் 16.50 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
'சீட்டா'வின் சிறப்புகள் ! நமீபிய சீட்டா சிறுத்தைகளை கூண்டிலிருந்து திறந்தார் பிரதமர் மோடி
2021ம்ஆண்டில் மட்டும் தெலங்கானா தகவல் தொழில்நுட்பத்துறை ரூ.1.84 லட்சம் கோடிக்கு ஏற்றுமதி செய்துள்ளது. 2014ம் ஆண்டில் இது ரூ.57ஆயிரம் கோடியாகத்தான் இருந்தது. நாட்டின் வளர்ச்சி வேகத்தையே நாம் முறியடித்துவிட்டோம்
இவ்வாறு சந்திரசேகர் ராவ் தெரிவித்தார்