Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் நிழற்குடை சர்ச்சை: மடியில் அமர்ந்து போராட்டம் நடத்திய மாணவர்கள்: மேயர் ஆர்யா உறுதி

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நிழற்குடையில் ஆண்-பெண் இருவரும் சேர்ந்து அமரக்கூடாத வகையில் போடப்பட்ட நாற்காலிக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து மடியில் அமரும் போராட்டத்தை நடத்தினர்.

A bus stop being redesigned in Kerala following the sit-on-lap controversy.
Author
First Published Sep 17, 2022, 2:14 PM IST

கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் நிழற்குடையில் ஆண்-பெண் இருவரும் சேர்ந்து அமரக்கூடாத வகையில் போடப்பட்ட நாற்காலிக்கு மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து மடியில் அமரும் போராட்டத்தை நடத்தினர்.

'சீட்டா'வின் சிறப்புகள் ! நமீபிய சீட்டா சிறுத்தைகளை கூண்டிலிருந்து திறந்தார் பிரதமர் மோடி

திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீகார்யம் பகுதியில் அரசு பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள நிழற்குடையில் மாணவர்களும், மாணவிகளும் ஒன்றாகச் சேர்ந்து அமர்வதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, அங்குள்ள இருக்கையை உடைத்து மூன்றாக மாற்றி தனித்தனியாக அமருமாறு வைத்தனர்.

A bus stop being redesigned in Kerala following the sit-on-lap controversy.

இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் திருவனந்தபுரம் மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கு இந்த விவகாரம் தெரியவரவே சம்பவ இடத்துக்கு நேரில் சென்றார். அந்த இருக்கைகளைப் பார்வையிட்டஅவர் விரைவாக இருக்கைகள் சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். 

8 நமீபிய சீட்டா சிறுத்தைகள் ஹெலிகாப்டர் மூலம் குவாலியர் உயிரியல் பூங்கா வந்தன

அதுமட்டுமல்லாமல் “ கேரளா போன்ற முற்போக்கு மாநிலத்தில், ஆண்-பெண் சேர்ந்து அமர்வதற்கு தடை ஏதும் இல்லை. ஒன்றாக  அமரக்கூடாது என்று பழமைபேசுபவர்கள் கற்காலத்தைச் சேர்ந்தவர்கள்” என ஆர்யா ராஜேந்திரன் விமர்சித்தார்.

ஆனால், இரு மாதங்களாகியும் நிழற்குடையின் இருக்கைகள் மாற்றித்தரப்படாமல் இருந்தது. இதையடுத்து, மார்க்சிக்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பானன இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள், மாணவர்கள் நேற்று ஒரே இருக்கையில் ஒருவர் மடிமீதுஒருவர் அமரும் போராட்டத்தை நடத்தினர். 

பொருளாதாரமும், சூழியலும் முரண்பட்ட துறைகள் அல்ல: பிரதமர் மோடி

இதையடுத்து, திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக வந்து தனித்தனியாக இருக்கும் இருக்கையை அகற்றினர். விரைவாக புதிய இருக்கைகள் அமைக்கப்படும் என உறுதியளித்துச் சென்றனர்.
கேரளா போன்ற முற்போக்கு மாநிலத்தில்கூட இருபாலர் பயிலும் கல்லூரிகளில் மாணவிகளிடம் மாணவர்கள் பேசக்கூடாது, கல்லூரிக்குள் ஒன்றாகச் சுற்றக்கூடாது, ஒன்றாக அமரக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios