Cheetah: cheetah in india: 8 நமீபிய சீட்டா சிறுத்தைகள் ஹெலிகாப்டர் மூலம் குவாலியர் உயிரியல் பூங்கா வந்தன
நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சீட்டா சிறுத்தைப் புலிகள் மத்தியப்பிரதேசம் குவாலியரிலிருந்து பால்பூர் அருகே உள்ள குனோ தேசியபூங்காவை வந்தடைந்தன.
நமீபியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 8 சீட்டா சிறுத்தைப் புலிகள் மத்தியப்பிரதேசம் குவாலியரிலிருந்து பால்பூர் அருகே உள்ள குனோ தேசியபூங்காவை வந்தடைந்தன.
நமீபியாவிலிருந்து 3 ஆண் சீட்டா, 5 பெண் சீட்டா சிறுத்தை புலிகள் இந்தியா வந்துள்ளன. இந்த சீட்டா சிறுத்தையில் தனிமைக்காலம் முடிந்து, 3 சீட்டா புலிகளை மட்டும் இன்று பிரதமர் மோடி திறந்துவிடுகிறார்.
ஏறக்குறைய 75 ஆண்டுகளுக்குப்பின் இந்தியாவில் சீட்டா சிறுத்தைப் புலிகள் வந்துள்ளன. கடந்த 1952ம் ஆண்டோடு இந்தியாவிலிருந்து சீட்டா புலிகள் இனம் அழிந்துவிட்டது.அதை மீட்டெடுக்கும் முயற்சியாக சீட்டா சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?
நமீபியாவிலிருந்து சீட்டா சிறுத்தைகளை கொண்டுவர சிறப்பாக வடிமைக்கப்பட்ட சரக்கு விமானம் பயன்படுத்தப்பட்டது. நமிபியாவிலிருந்து நேற்று இரவு புறப்பட்ட இந்த சிறப்பு விமானம் 10 மணிநேரப் பயணத்துக்குப்பின் இன்று காலை மத்தியப்பிரதேசம் குவாலியர் வந்து சேர்ந்தது.
குவாலியர் நகரிலிருந்து 165கி.மீ தொலைவில் உள்ள சியோபூர் மாவட்டத்தில் உள்ள கேஎன்பி உயிரியல் பூங்காவுக்கு சினூக் ஹெலிகாப்டர் மூலம் 8 சீட்டா சிறுத்தைகளும் கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை 10.45 மணிக்கு நடக்கும் நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளான இன்று பிரதமர் மோடி, சீட்டா ரக சிறுத்தைகளி்ல் தனிமைக்காலம் முடித்த 3 சிறுத்தைகளை மட்டும் கூண்டலிருந்து திறந்து விட உள்ளார்.
நமியாவிலிருந்து குவாலியர் வரை கொண்டு வரப்பட்ட சீட்டா சிறுத்தைகளுக்கு உணவு ஏதும்
ஜான்சன் அன்ட் ஜான்சன் பவுடர் நிறுவனத்தின் தயாரிப்பு லைசன்ஸ் ரத்து: மகாராஷ்டிரா அரசு அதிரடி
வழங்கப்படாமல் வெறும் வயிற்றுடன் கொண்டு வரப்பட்டன. கூண்டிலிருந்து திறந்துவிடும் முன் உணவு வழங்கப்பட்டு பின்னர் திறந்துவிடப்படும். கூண்டுகளின் கதவுகள் தானியங்கி மூலம் திறக்கப்படும் என்பதால், பிரதமர் மோடி ரீமோட் மூலம் கதவுகளை திறந்துவிடுவார்.
கூண்டிலிருந்து திறந்துவிடப்படும் சீட்டா ரக சிறுத்தைகள் வித்தியாஞ்சல் மலைப்பகுதிக்குள் விடப்படும். இந்த மலைப்பகுதி 344 சதுர கிலோமீட்டர் பரப்பளவாகும்.
இந்தியாவில் கடைசியாக 1947ம் ஆண்டு கடைசியாக சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இருந்தன. அவை சத்தீஸ்கர் மாநிலம், கொரியா மாவட்டத்தில் கடைசி சீட்டா புலியும் இறந்துவிட்டது.
பிரிக்கப்படாத மத்தியப்பிரதேசத்தோடு முன்பு சத்தீஸ்கரின் கொரியா மாவட்டம், இணைந்திருந்தது. இங்குதான் கடைசியாக சீட்டா ரக சிறுத்தைகள் இருந்தன. அதன்பின் 1952ம் ஆண்டு சீட்டா ரக சிறுத்தைப் புலிகள் இந்தியாவிலிருந்து அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
எப்போதும் மக்கள் பற்றிய சிந்தனை.. மோடிக்கு மாற்றே இல்லை.. பிரதமருக்கு மாஸா வாழ்த்து சொன்ன அண்ணாமலை.
ஆப்பிரிக்க சீட்டா ரக சிறுத்தைப் புலிகளை இந்தியாவில் சேர்க்கும் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்படிகடந்த ஆண்டு நவம்பர் மாதமே சீட்டா புலிகள் இந்தியா வந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக தாமதமானது.