amarinder singh: bjp: punjab: பாஜகவில் இணையும் பஞ்சாப் முன்னாள் முதல்வர்?

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங் அடுத்தவாரம் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Capt. Amarinder Singh, a former chief executive of Punjab, will join the BJP next week.

பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரிந்தர் சிங் அடுத்தவாரம் பாஜகவில் இணையப் போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமரிந்தர் சிங் தன்னுடைய பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைக்கப்போவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியில் இந்தியா கவனம்: ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

Capt. Amarinder Singh, a former chief executive of Punjab, will join the BJP next week.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங் குடும்பம் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பமாகும். பஞ்சாப் முதல்வராக அமரிந்தர் சிங் 2002-07 மற்றும்2017-21 ஆகிய  இருமுறை பதவி வகித்துள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சிப் பிரச்சினை தீவிரமானதையடுத்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அமரிந்தர் சிங் விலகினார். பஞ்சாப் தேர்தலுக்கு 4 மாதங்கள் இருக்கும் முன் திடீரெனஇந்த முடிவை அமரிந்தர் சிங் எடுத்தார்.

பிரதமர் மோடியின் பாபுலர் திட்டங்கள் என்னென்ன? அவற்றின் வெற்றிப் பாதைகள் ஒரு பார்வை!!

அதுமட்டுமல்லாமல் பஞ்சாப் லோக் காங்கிரஸ்  என்ற புதிய கட்சியைத் தொடங்கி, தேர்தலில் பாஜகவுடன் இணைந்து கூட்டுவைத்து அமரிந்தர் சிங் போட்டியிட்டார். ஆனால்,பஞ்சாப் லோக் காங்கிரஸ் தேர்தலில் படுதோல்வி அடைந்தது. நோட்டைவிட குறைவான வாக்குகளை அமரிந்தர் சிங் கட்சிக்கு கிடைத்தது. 

நோட்டாவுக்கு 1,10,308 லட்சம் வாக்குகள் கிடைத்தநிலையில் அமரிந்தர் சிங் கட்சிக்கு 84,697 வாக்குகள்தான் கிடைத்தன. தேர்தலிலும் அமரிந்தர் சிங் தோல்வி அடைந்து எம்எல்ஏ பதவியையும் பறிகொடுத்தார்.

காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிய உட்கட்சி குழப்பத்தை பயன்படுத்திக் கொண்ட ஆம் ஆத்மி வாக்குகளை அறுவடை செய்து ஆட்சியை முதல்முறையாகக் கைப்பற்றியது.

Capt. Amarinder Singh, a former chief executive of Punjab, will join the BJP next week.

இந்நிலையில் 80-வயதான அமரிந்தர் சிங், வரும் 18ம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார். அதற்முன்பாக சமீபத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை அமிரிந்தர் சிங் சந்தித்துப் பேசினார். இதன் மூலம் பாஜகவில் சேரலாம், பொறுப்பு வழங்கப்படலாம் என பேசப்பட்டது.

இந்நிலையில் பாஜகவில் இணைவதற்கு கேப்டன் அமரிந்தர் சிங் முடிவு செய்துள்ளதாக அவரின் நெருங்கிய வட்டாரங்களும், கட்சியின் செய்தித்தொடர்பாளரும் இன்று தெரிவித்துள்ளனர்.

நன்கொடை தராத கடைக்காரரிடம் தகராறு: 3 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து கேரளா காங்கிரஸ் நடவடிக்கை

வரும் 19ம் தேதி பாஜகவில் முறைப்படி அமரிந்தர் சிங் இணையக்கூடும் எனத் தெரிகிறது. ஆனால், இன்னும் தேதி உறுதியாகவில்லை. அதுமட்டுமல்லாமல் அமரிந்தர் சிங் தன்னுடைய மக்கள் லோக் காங்கிரஸ் கட்சியையும் பாஜகவுடன் இணைக்க உள்ளார். அடுத்தவாரம் டெல்லி செல்லும் அமரிந்தர் சிங், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைவார் எனத் தெரிகிறது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios