கேரளாவின் கொல்லம் நகரில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கேட்ட நன்கொடை தராத கடைக்காரரிடம் தகராறு செய்த 3 காங்கிரஸ் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கேரளாவின் கொல்லம் நகரில் பாரத் ஜோடோ யாத்திரைக்கு கேட்ட நன்கொடை தராத கடைக்காரரிடம் தகராறு செய்த 3 காங்கிரஸ் நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து காங்கிரஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணத்தைத் தொடங்கியுள்ளார். கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை செல்லும் நடைபயணத்தில் 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்களைக் கடந்து ராகுல் நடக்கிறார், 150 நாட்கள் வரை இந்தப் பயணம் நடக்கிறது.

கொல்லத்தில் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு கேட்ட நன்கொடை கொடுக்காததால் கடைக்காரரை தாக்கியதால் பரபரப்பு!!

இந்நிலையில் கேரளாவில் ராகுல் காந்தி தற்போது நடைபயணம் சென்றுவருகிறார். ராகுல் காந்தி நடைபயணம் செல்லும்போது, பின் தொடர்ந்து வரும் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடம் இருந்து நன்கொடை பெற்று வருகிறார்கள். இது மக்களின் விருப்பத்தின் அடிப்படையி்ல் நன்கொடை பெறப்படுகிறது.

இந்நிலையில் கொல்லம் நகரில் காய்கறிக்கடை உரிமையாளரிடம் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் ரூ.2 ஆயிரம் நன்கொடை கேட்டனர். ஆனால், அவர் ரூ.500 மட்டுமே கொடுத்தார். இதையடுத்து, கடைக்காரருக்கும், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. இதில் காங்கிரஸ்நிர்வாகிகள், கடையின் பொருட்கள், எடைஅளவு ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டு, மிரட்டல் விடுத்து சென்றனர். 

என்னய விட்றாதிங்க..! பயணிகளிடம் கெஞ்சிய திருடன் ! பீகாரில் ஓடும் ரயிலில் 10கி.மீ ஜன்னலில் தொங்கி பயணம்

இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வைரலானது. காங்கிரஸ் நிர்வாகிகளின் அடாவடியான போக்கு குறித்து சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

இதையடுத்து, கேரள காங்கிஸ் நிர்வாகம், காய்கறிக்கடை உரிமையாளரிடம் தகராறு செய்த 3 நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. கேரள காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “கொல்லம் நகரில் காங்கிரஸ் நிர்வாகிகள் 3 பேர் ஏற்கமுடியாத செயலில் ஈடுபட்டனர்.

ஆம் ஆத்மி கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யுங்கள்... தேர்தல் ஆணையருக்கு அதிகாரிகள் குழு கடிதம்!!

அவர்கள் 3 பேரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தத்தை அவர்கள் பிரதிபலிக்கவில்லை, இதுபோன்ற செயல்களுக்கு மன்னிப்பே இல்லை. காங்கிரஸ் கட்சி தாமாக முன்வந்து கொடுக்கும் மக்களிடம் மட்டுமே நன்கொடை வசூலிக்கிறது. மற்ற கார்பரேட் நன்கொடைபோல் வாங்கவில்லை” எனத் தெரிவித்தார்

கடை உரிமையாளர் எஸ் பவாஸ் கூறுகையில் “ பாரத் ஜோடோ யாத்திரைக்காக ரூ.2 ஆயிரம் நன்கொடை தரக் கோரிகாங்கிரஸ் நிர்வாகிகள் கேட்டனர். அதற்கு என்னால் ரூ.2 ஆயிரம் தரமுடியாது ரூ.500 தருகிறேன் என்றேன். அதற்கு அவர்கள் என்னிடம் ரூ.2 ஆயிரம் கோரினர். நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம், வாழ்வாதாரம் கடினமாக இருக்கிறது, ஆதரவாக இருக்க வேண்டிய நீங்கள், பணம் கேட்கிறீர்களே என்றேன். அதற்கு காய்கறிகளை தூக்கி எறிந்து, எடை அளவுகளை உடைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியினர் சென்றனர்” எனத் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில்வைரலாக இந்தவீடியோ குறித்து கேரள போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர். கடைக்காரரை மிரட்டியது, பொருட்களை சூரையாடியது, மிரட்டல் ஆகியபிரிவில் காங்கிரஸ் நிர்வாகிகள் மீதும், பொதுஇடத்தில் சண்டையிட்ட கடைக்காரர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.