Asianet News TamilAsianet News Tamil

Bharat Jodo:கொல்லத்தில் பாரத் ஜோடோ யாத்ராவுக்கு கேட்ட நன்கொடை கொடுக்காததால் கடைக்காரரை தாக்கியதால் பரபரப்பு!!

கேரளாவில் காய்கறிக் கடை நடத்தி வருபவரிடம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் நன்கொடை கேட்டுள்ளனர். கடைக்காரர் ரூ. 500 கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ரூ. 1000 கேட்டு கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இது தற்போது காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Bharat Jodo Yatra, Rahul Gandhi, Kerala Congress, Kollam Vegetable vendor beaten by Congress people
Author
First Published Sep 16, 2022, 11:30 AM IST

கேரளாவில் காய்கறிக் கடை நடத்தி வருபவரிடம் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் நன்கொடை கேட்டுள்ளனர். கடைக்காரர் ரூ. 500 கொடுத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியினர் ரூ. 1000 கேட்டு கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இது தற்போது காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமர்கண்ட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி… ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் SCO உச்சி மாநாட்டில் பங்கேற்பு!!

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ அமைப்பினர், யாத்திரைக்கு போதிய நன்கொடை கொடுக்காததால் கொல்லத்தில் கடை மீது தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது. குன்னிக்கோட்டில் மரக்கறி வியாபாரி அனஸ் என்பவரது கடையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் பொருட்களை வீசி எறிந்ததாக அனஸ் புகாரில் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது. பாரத் ஜோடோ யாத்ராவின் கொல்லம் பயணம் தொடர்பாக உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்திற்கு வந்துள்ளனர். இரண்டாயிரம் ரூபாய்க்கான ரசீது எழுதி அனஸிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால், ரூ. 500 தான் கொடுக்க முடியும் என்று அனஸ் கூறியுள்ளார். ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. கடையில் இருந்த திராட்சை மற்றும் காய்கறிகளை அடித்து நொறுக்கியதாக கடையின் உரிமையாளர் அனஸ் குற்றம் சாட்டியுள்ளார். 

ஆதார் துறையில் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் சம்பளத்தில் வேலை.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இங்கே !!

இந்த சம்பவம் குறித்து கடைக்காரர்கள் குன்னிக்கோடு போலீசில் புகார் செய்தனர். அதே சமயம், விளக்குடி மேற்கு மண்டல காங்கிரஸ் கமிட்டி தலைவர் அளித்த பதிலில், பொருட்களை தூக்கி எறியவில்லை என்றும், பாரத் ஜோடோ யாத்ராவை விமர்சிக்க சிபிஎம் தலைவர்கள் பிரச்னையை உருவாக்குகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

‘சீட்டா’ சிறுத்தைகளை அழைத்து வர சிறப்பு விமானம்! இந்தியாவிலிருந்து நமிபியா சென்றது

இதற்கிடையில், பாரத் ஜோடோ யாத்திரையைத் தவிர அடுத்த யாத்திரையை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இந்தியாவின் மேற்கு முனையிலிருந்து கிழக்கு முனை வரை மலையேற்றத்தை அறிவித்துள்ளது.

இந்தப் பயணம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கொல்லத்தில் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 150 நாட்கள் நடைபெறும் பாரத் ஜோடோ யாத்திரை ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில் புதிய யாத்திரை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios