முஸ்லிம்களை திருப்திபடுத்த பஜ்ரங் தளத்துக்குத் தடையா? காங். அறிவிப்பு குறித்து அசாம் முதல்வர் சீற்றம்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிஎஃப் வெளியிட்டதைப் போல இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா விமர்சித்துள்ளார்.

Karnataka Election 2023 Manifesto promise to ban Bajrang Dal: 'Congress is taking revenge on PFI's behalf'

2023ஆம் ஆண்டு கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பஜ்ரங் தளம் மற்றும் பிஎஃப்ஐ ஆகிய அமைப்புகள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சியின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

இன்று செய்தியாளர் சந்திப்பில் பேசிய அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, காங்கிரஸ் கட்சி பிஎஃப்ஐ சார்பில் பழிவாங்கும் முயற்சியில் இறங்கி இருப்பதாவும் தடைசெய்யப்பட்ட முஸ்லிம் அமைப்பை திருப்திபடுத்த இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாவும் சாடி இருக்கிறார்.

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2000: கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

"பிஎஃப்ஐ ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. கர்நாடக வரலாற்றைப் பார்த்தால், சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பிஎஃப்ஐ கைதிகளை விடுவித்துள்ளது. பிஎஃப்ஐ உறுப்பினர்கள் மீதான வழக்குகளையும் அவர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். இப்போது பிஎஃப்ஐ மீது ஏற்கெனவே தடை விதிக்கப்ப்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் பஜ்ரங் தளத்தை தடை செய்யும் என்பதைத்தான் கூறி இருக்கிறது." என்று ஹிமந்தா தெரிவித்தார்.

மேலும், "பிஎஃப்ஐ அமைப்பை பாஜக தடை செய்ததால், முஸ்லிம்களை திருப்திப்படுத்த, பஜ்ரங் தளத்தை தடை செய்வோம் என்று கூறியுள்ளனர். இது முஸ்லிம்களின் செயல்திட்டம் என தெளிவாகத் தெரிகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"பழிவாங்குவோம் என்று பிஎஃப்ஐ சொல்ல முடியாததை, இன்று காங்கிரஸ் சொல்கிறது. பழிவாங்குவோம் என்று சொல்ல பிஎஃப்ஐ-க்கு தைரியம் இல்லை. அதனால் அவர்களைப் பார்த்து காங்கிரஸ் கட்சியின் டி.கே.சிவகுமாரும் சித்தராமையாவும் 'பாருங்கள். கவலைப்பட வேண்டாம், பாஜகவை பழிவாங்க நாங்கள் இருக்கிறோம்' என்று கூறுகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், பிஎஃப்ஐ விருப்பத்தின் பேரில்தான் பஜ்ரங் தளத்தை தடை செய்வதாகச் சொல்லப்பட்டுள்ளது" என அசாம் முதலமைச்சர் கூறினார்.

மகாத்மா காந்தியின் பேரன் அருண்காந்தி உடல்நலக்குறைவால் காலமானார்

"பிஎஃப்ஐ ஏற்கெனவே தடை செய்யப்பட்டுள்ளது. அதை தடை செய்வோம் என்று சொல்வதில் என்ன பயன்? ஏன் பஜ்ரங்தளத்தை தடை செய்கிறீர்கள்? அவர்கள் மீது என்ன கிரிமினல் குற்றச்சாட்டு உள்ளது? அவர்கள் எங்கே குண்டுவைத்தார்கள் அல்லது கலவரம் செய்தார்கள்? காங்கிரஸ் பிஎஃப்ஐ சார்பாக செயல்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பிஎஃப் வெளியிட்டது போலவே இருக்கிறது" எனவும் சர்மா விமர்சித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios