விரைவில் ஏலத்திற்கு வரும் ஜெயலலிதா சொத்துகள்.. என்னென்ன தெரியுமா? கர்நாடகா அரசு எடுத்த அதிரடி முடிவு
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், 4 பேருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை ஏலம் விட வழக்கறிஞரை கர்நாடக அரசு நியமித்தது.
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடகா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர்கள் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!
இதில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில் விடுதலையானர்கள்.
இதற்கிடையே தான் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கடிகாரங்கள் ஏலம் விட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட சிறப்பு வழக்கறிஞராக கிரண் எஸ்.ஜாவலியை நியமித்து கர்நாடகா அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க..பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்..பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி.. பதறிய அதிகாரிகள் - இதுதான் காரணமா.!!