பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில்..பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி.. பதறிய அதிகாரிகள் - இதுதான் காரணமா.!!
பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் அக்ஷதா மூர்த்தி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் அமர வைக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
குடியரசு தினத்தன்று 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், முதல் பகுதி விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டன. இந்த நிலையில், 2 ஆம் பகுதி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.
இதில், குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தியும் கலந்து கொண்டார். என்ன காரணம் என்றால், இவரது தாயாரான சுதா மூர்த்தி பத்ம பூஷன் விருதை பெறுவதைக் காணவே இவர் வந்துள்ளார்.
முன்னதாக நடுவரிசையில் தனது சொந்த குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிற விருது பெற்றவர்களின் குடும்பத்தினருடன் அமர்ந்திருந்தார் அக்ஷதா மூர்த்தி. பிறகு ப்ரோட்டோகால்படி, அங்கிருந்த அதிகாரிகள் அவரை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் அமர வைத்தனர்.
அவரது மறுபுறத்தில் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் குடும்பத்தினர் அமர்ந்திருந்தனர். அதே வரிசையில் அனுராக் தாக்கூர் போன்ற அமைச்சர்களும் இருந்தனர். விழாவின் தொடக்கத்திலும், முடிவிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது அக்ஷதா மூர்த்தி அமைச்சர் ஜெய்சங்கருக்கு அருகில் நின்றார்.
இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த நிகழ்வில் அக்ஷதா மூர்த்திக்கு பிரிட்டிஷ் பாதுகாப்பு இல்லை என்று கூறப்படுகிறது. அதிபரின் மனைவி எந்தவொரு பாதுகாப்பும் இல்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் தந்தை நாராயண மூர்த்தி, சகோதரர் ரோஹன் மூர்த்தி மற்றும் சுதா மூர்த்தியின் சகோதரி ஆகியோர் இருந்தனர். எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான சுதா மூர்த்திக்கு சமூகப் பணிக்காக பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க..கோடு போட்ட ஸ்டாலின்.. ரோட்டை போட்ட எடப்பாடி பழனிசாமி.. ஏய் எப்புட்றா.! பாவம் கட்சிக்காரங்க !!
இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!