இது எங்க ஏரியா... இங்க சிகரெட் பிடிப்போம், தண்ணி அடிப்போம்... அதை கேக்க நீங்க யாரு? மாணவியின் தெனாவட்டு பேச்சு
பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவர் இறந்ததை அடுத்து, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் வளாகத்திற்குள் மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு கண்டிப்பான தடை விதித்துள்ளது.
விடுதி வளாகத்தில் முதலாம் ஆண்டு படிக்கும் 17 வயது மாணவன் பால்கனியில் இருந்து தவறி விழுந்து இறந்ததை அடுத்து, ஜாதவ்பூர் பல்கலைக்கழகம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மதுவைத் தடை செய்துள்ளது. சரியான அடையாளச் சான்று இல்லாமல் மாணவர்கள் வளாகத்திற்குள் வரவும் அனுமதி மறுக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்கலைக்கழகத்தின் மதுவிலக்கு உத்தரவுக்கு எதிராக மாணவி ஒருவர் ஆவேசமாகப் பேசியுள்ளார். பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு இரண்டாவது வீடு போல இருப்பதால், அவர்கள் வளாகத்திற்குள் புகைபிடிக்கவும், மது அருந்தவும் உரிமை உண்டு அந்த மாணவி கூறியுள்ளார்.
அந்த உரிமையை யார் கொடுத்தார்கள் என்று கேட்டதற்கு, "எனக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம். எனக்கே அந்த உரிமை உள்ளது" என அந்த மாணவி கடும் சீற்றத்துடன் பதிலளித்தார். மாணவியின் இந்த பேச்சு வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. மாணவியின் முதிர்ச்சியற்ற பேச்சை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர் அந்த மாணவிக்கு புத்திமதி கூறி பதிவிடுகின்றனர்.
வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்ப இன்னொரு புதிய வசதி! இனி கேம்ப்ஷனையும் எடிட் பண்ணலாம்?
இந்த வீடியோவு குறித்து கருத்து கூறியுள்ள ரூபா மூர்த்தி என்ற ட்விட்டர் பயனர் ஒருவர், "அப்படியானால், வீட்டில் குடும்ப வன்முறை இருந்தால், இரண்டாவது வீடு போன்ற பல்கலைக்கழக வளாகத்திலும் வன்முறை அனுமதிக்கப்பட வேண்டுமா?" என்று கேட்டிருக்கிறார்.
பல்கலைக்கழகத்தில் கட்டுப்பாடுகள்
இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை ஜாதவ்பூர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய விரும்பும் எவரும் பல்கலைக்கழகம் வழங்கிய சரியான அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல்கலைக்கழகம் வழங்கிய அடையாள அட்டை இல்லாத பட்சத்தில், அதிகாரபூர்வமான தனிநபர் அடையாளச் சான்றிதழ் ஒன்றைக் காட்ட வேண்டும். வருபவர் வளாகத்திற்குள் சென்று சந்திக்கப் போகும் நபரின் விவரங்களையும் கூறவேண்டும்.
இது தவிர, வளாகத்திற்குள் வரும் வாகனங்களில் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட JU ஸ்டிக்கர்களை ஒட்டியிருக்க வேண்டும். அப்போதுதான் அந்த வாகனங்கள் வளாகத்தில் அனுமதிக்கப்படும். வளாகத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபானம் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நடமாட்டத்தைக் கண்காணிக்க முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதாக பல்கலைக்கழக நிர்வாகம் கூறியுள்ளது.
“பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வாயில்கள் மற்றும் சாலைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்படும். வகுப்பறைகள் அல்லது வராண்டாக்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படாது. ஆனால் வளாகம் இனி சிசிடிவி கண்காணிப்பில் தான் இருக்கும்" என ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சிநேஹோமோஞ்சு பா தெரிவித்துள்ளார்.