5,600 பாம்புகளைப் பிடித்து சாதனை பரிந்த ஹரியானா பாம்பு மனிதர்! 10 முறை மரணத்தை வென்ற இளைஞர் பவன் ஜோக்பால்!
ஹரியானாவின் பதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் ஜோக்பால் பத்து ஆண்டு காலமாக 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளார். இந்தப் பணியில் இதுவரை 10 முறை பாம்புகளால் கடிக்கப்பட்டுள்ளார்.
ஒருமுறை கடித்தால், இருமுறை இல்லை 10 முறை பாம்புகளால் கடிக்கப்பட்ட பின்பும் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லாமல் மீண்டு வந்திருக்கிறார் ஹரியானாவின் பதேஹாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் ஜோக்பால். பத்து காலன் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான இந்த இளைஞர், கிட்டத்தட்ட பத்து ஆண்டு காலமாக கிராமம் மற்றும் நகர்புறங்களிலும் மக்கள் வசிக்கும் வீடுகளுக்குள் நுழையும் பாம்புகளைப் பிடிக்கும் பணியைச் செய்து வருகிறார்.
5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளதாகவும், இதுவரை 10 முறை கடிக்கப்பட்டதாகவும் ஜோக்பால் கூறுகிறார். "நான் காப்பாற்றிய சமீபத்திய பாம்பு ஒரு குட்டி நாகப்பாம்பு. பதேஹாபாத்தில் சுதந்திர தின விழாவில் முதல்வர் தேசியக் கொடியை ஏற்றிக்கொண்டிருந்தபோது, அருகிலுள்ள திறந்த வெளியில் அது காணப்பட்டது." என்று சொல்கிறார் ஜோக்பால்.
சமீபத்தில் ஏற்பட்ட ஹரியானா வெள்ளத்தின்போது பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியபோது, மரங்களில் தஞ்சம் அடைந்த பல பாம்புகளை மீட்டதாக கூறினார். அவரால் மீட்கப்பட்ட பாம்புகள் அனைத்தும் பத்திரமாக காடுகளில் விடப்பட்டுள்ளன.
சந்திராயன்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் நேரத்தில் சிறிய மாற்றம்: இஸ்ரோ தகவல்
"நான் இப்போது 10 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்புகளை மீட்டு வருகிறேன். அவற்றில் பெரும்பாலானவை கிராமங்களில் உள்ள மக்களின் வீடுகள் மற்றும் தோட்டங்களுக்குள் நுழைகின்றன" என்கிறார்.
முழு நேர வேலையாக பாம்பு பிடிக்கும் வேலையைச் செய்ய அவரைத் தூண்டியது எது என்று கேட்டதற்கு, அவர் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டார். "எனக்கு 17 வயது இருக்கும் போது, என் கிராமத்து வீட்டிற்குள் ஒரு பாம்பு புகுந்தது. அக்கம் பக்கத்தினரும் அங்கு கூடியிருந்த மக்களும் அதைக் கொல்ல முயன்றனர். நான் அந்த அதற்கு தீங்கு செய்ய வேண்டாம் என்று வற்புறுத்தினேன்" என்று நினைவுகூர்கிறார்.
தொடர்ந்து பேசும் அவர், "நான் அதைக் காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் அதற்குள் யாரோ பாம்பை அடித்துக் கொன்றுவிட்டனர். அந்த சம்பவம் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர், நான் டிஸ்கவரி சேனலைப் பார்க்க ஆரம்பித்தேன். முதலில், சிறிய பாம்புகளை மீட்க ஆரம்பித்தேன். பல புத்தகங்களைப் படித்தேன். பாம்புகள் மற்றும் அவற்றைப் பற்றிய அறிவை சேகரித்தேன்" என்று கூறுகிறார்.
"இப்போது என்னால் பாம்புகளை எளிதில் கையாள முடிகிறது. இதுவரை 5,600க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டுள்ளேன். 10 முறை பாம்பு கடித்து இரண்டு நாட்களாக மருத்துவமனையில் இருந்திருக்கிறேன்." என்கிறார் பவன் ஜோக்பால்.
நான் ரொம்ப பாக்கியசாலி... அயோத்தி அனுமன் கோயிலில் வழிபாடு செய்தபின் நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்