சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு மனைவியுடன் உத்தரப் பிரதேசத்தில் சுற்றிவந்து பலரைச் சந்திக்கிறார்.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அயோத்தியில் உள்ள ஹனுமன்கர்கி கோவிலில் வழிபாடு செய்தார். அயோத்தியில் உள்ள புகழ்பெற்ற ஹனுமன்கர்கி அனுமன் கோவிலுக்கு மனைவியுடன் சென்ற ரஜினிக்கு மாலை அணிவித்து சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தரிசனம் செய்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த் காரில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் சொன்னார். அப்போது அனுமன் கோயிலில் தரிசனம் செய்தது குறித்து பக்தி பரவசத்துன்ன் பேசிய ரஜினிகாந்த், "நான் ரொம்ப பாக்கியம்சாலி. நான் எப்போதும் இங்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன்..." எனக் கூறினார்.

முன்னதாக, கோயிலுக்குச் செல்வதற்கு முன் உ.பி.யில் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவையும் சந்தித்தார். அகிலேஷின் தந்தை முலாயம் சிங்கின் படத்திற்கு மாலை போட்டு மரியாதை செலுத்தினார்.

உ.பி.யை கலக்கும் 'ஜெயிலர்'! யோகி உள்ளிட்ட அரசியல் தலைவர்களுடன் ரஜினிகாந்த் போட்டோஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இமயமலை பயணத்தை முடித்துக்கொண்டு மனைவியுடன் உத்தரப் பிரதேசத்தில் சுற்றிவந்து பலரைச் சந்திக்கிறார். சனிக்கிழமை, அந்த மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல், துணை முதல்வர் கேசவ பிரசாத் மவுரியா, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.

உ.பி. முதல்வரை அவரது வீட்டுக்கே சென்று சந்தித்த அவர் ஆதித்யநாத்தைக் கண்டவுடன் சட்டென்று காலில் விழுந்து வணங்கினார். அவருக்கு பூங்கொத்தும் விநாயகர் சிலையும் பரிசாகக் கொடுத்து அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டார்.

முன்னதாக ஜார்க்கண்ட் சென்றிருந்த ரஜினி அங்கு ஆளுநராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்தார். ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அம்பா பிரசாத் ரஜினியை தேடி வந்து சந்தித்து, அவருக்கு ரோஜாப்பூவைக் கொடுத்து அசத்தினார்.

அப்பா சொன்ன வார்த்தை உண்மைதான்! லடாக்கில் பைக் ஓட்டி மகிழ்ந்த ராகுல் காந்தி நெகிழ்ச்சி!